ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மீது வீரர்கள் வைத்த பகீர் குற்றச்சாட்டு. கோச்சை தூக்க தயாராகும் நிர்வாகம் – விவரம் இதோ

Langer
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய அணியை சரி வர வழி நடத்தவில்லை என்றும் அவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி சரிவை சந்தித்து உள்ளது என்றும் அடிக்கடி செய்திகள் வெளியாவது உண்டு. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் தொடரில் பங்கேற்று அவர்களை அசாத்தியமாக எதிர்கொண்டு வீழ்த்தியிருந்தது.

langer

- Advertisement -

ஏற்கனவே ஒரு முறை இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இந்நிலையில் அந்த தொடர் முடிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் பெரும்பாலோனோர் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் இன் பயிற்சி முறை எங்களுக்கு சரிப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது பயிற்சி முறையை மாற்ற வேண்டும் எனவும் வீரர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் மீது அதிருப்தியடைந்தது மட்டுமின்றி அவருக்கு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு விடுத்துள்ள எச்சரிக்கையில் :

Langer 1

உடனடியாக உங்களது பயிற்சி முறையில் மாற்றம் செய்யுங்கள். இல்லையெனில் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என கண்டிப்பாக கூறியுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய பயிற்சியாளருக்கும் வீரர்களுக்கும் இடையே ஒரு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.

Langer

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அவர் நான்கு ஆண்டுகள் பயிற்சியாளராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது பயிற்சியின் கீழ் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து வீழ்ச்சியை கண்டு வருவதால் அவருடைய பதவிக்காலத்தை விரைவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு முடிவுக்குக் கொண்டு வரும் எனவும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement