இந்திய அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட ஆஸி நிர்வாகம். நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி – விவரம் இதோ

INDvsAUS

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னி மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வீரர்களின் ஆட்டத்தை விட ரசிகர்களின் இனவெறி குறித்த சர்ச்சை தான் அதிகமாக விஸ்வரூபமாக வெடித்துள்ளது. இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஆகியோர் மீது பார்வையாளர்கள் இனவெறி கருத்துக்களை கூறி சர்ச்சையை எழுப்பினர்.

Siraj 2

இதுதொடர்பாக மூன்றாம் நாள் ஆட்டத்திலேயே சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் மைதானத்தில் இருந்த அம்பயர்களிடம் தங்களது புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் 4-வது நாளான இன்றும் ரசிகர்கள் இனவெறியை தூண்டும் வகையில் பேசியதாக மேலும் அவர்கள் இருவரைத் தவிர ரோகித் மற்றும் சைனி ஆகியோரை குறிப்பிட்டு பேசியதாகவும் புகார் இன்று வைக்கப்பட்டது.

மேலும் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த சிராஜ் பந்து வீசாமல் நேரடியாக சென்று அம்பயரிடம் தனது புகாரை தெரிவித்தார். இதனால் போட்டி 10 நிமிடம் வரை தடைபட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அதிர்ச்சி அடைந்த கேப்டன் ரஹானே மற்றும் இந்திய வீரர்கள் அனைவரும் நடுவரிடம் சென்று புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக மைதானத்தில் இனவெறி குறித்து குரல்களை எழுப்பிய ரசிகர்களை மைதானத்திலிருந்து மைதான நிர்வாகிகள் வெளியேற்றினர்.

Siraj

அதுமட்டுமின்றி ரசிகர்கள் மது குடித்து இருந்ததால் அது போன்று நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இனவெறி புகார் குறித்து தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது. அதில் அவர்கள் குறிப்பிட்டதாவது : இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவதை ரசிகர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் இந்த விடயத்தை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இந்திய வீரர்களை குறிவைத்து இனவெறியை தூண்டும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதி.

- Advertisement -

இனவெறியை தூண்டுபவர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்காது. இந்திய கிரிக்கெட் அணி நண்பர்களிடம் நாங்கள் வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதோடு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக நிச்சயம் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.