இந்திய அணி வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நடக்க பல பாதுகாப்பு ஏற்பாடுகளை கிரிக்கெட் ஆஸ்திரேலியா செய்ய முன்வந்துள்ளது. மேலும் இதற்காக 322 கோடியில் புதிய ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த வசதிகள் கிரிக்கெட் வீரர்களுக்காக முற்றிலும் பிரத்யேகமாக செய்யப்பட்டு வருகிறது.

எப்போதும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டிகள் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பரபரப்பான ஒரு தொடராக பார்க்கப்படுகிறது. மேலும் இவ்விரு அணிகளும் உலகின் பலம்வாய்ந்த அணிகள் என்பதால் எப்போதும் இவ்விரு அணிகளுக்கும் இடையே எந்த தொடராக இருந்தாலும் பலத்த போட்டி நிலவும்.
ஏற்கனவே கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சென்று முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இதற்கு பதிலடி தரும் விதமாக ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை எதிர்பார்த்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியை வீழ்த்துவதன் மூலம் ஏற்கனவே அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க ஆஸ்திரேலியா அணி எதிர்பார்த்து காத்திருக்கிறது.

கடந்தமுறை ஆஸ்திரேலிய அணியின் தடை காரணமாக ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் இல்லாததாலேயே இந்திய அணி வெற்றி பெற்றதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதனை பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்றால் இம்முறை இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளுக்கு பதிலாக ஐந்து போட்டிகள் ஆக மாற்ற ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஏற்கனவே சென்ற வருடம் ஆஸ்திரேலியா சென்ற போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன் காரணமாக தொடரில் உள்ள டெஸ்ட் போட்டிகளை அதிகமாக வைத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது போலிருக்கிறது.
ஆஷஸ் தொடரை போன்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆக மாற்றி வெற்றிக்கான புதிய வியூகத்தை வகுத்து இருக்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.



