ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி சிட்னியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் மேத்தியூ ஷார்ட் 3 ரன்கள் எடுத்தார். 3, 4, 5, 6 ஆகிய பந்துகளில் ஜேக் பிரேசர் மெக்குர்க் 4, 4, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டார். அந்த வகையில் முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலியா 21 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை பெற்றது.
அசத்திய ஆஸ்திரேலியா:
தொடர்ந்து விளையாடிய அந்த ஜோடி 52 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த போது ஷார்ட் 32 (17) ரன்களிலும் மெக்குர்க் 20 (9) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஜோஸ் இங்லிஸ் டக் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த மேக்ஸ்வெல் 21, ஸ்டோய்னிஸ் 14, டிம் டேவிட் 18, ஆரோன் ஹார்டி 28 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்கள்.
இறுதியில் 20 ஓவரில் ஆஸ்திரேலியா 147-9 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 4, அப்பாஸ் அப்ரிடி 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பின்னர் 148 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு முகமது ரிஸ்வான் 16, பாபர் அசாம் 3, ஃபர்ஹான் 5, ஆகா சல்மான் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.
ஆஸ்திரேலியா பதிலடி:
அதனால் 44-4 என தடுமாறிய பாகிஸ்தானுக்கு மிடில் ஆர்டரில் உஸ்மான் கான் அதிரடியாக விளையாடி 52 (38) ரன்கள் எடுத்தார். அவருடன் இர்பான் கான் 37* (28) ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 19.4 ஓவரில் 134 ரன்களுக்கு பாகிஸ்தானை ஆல் அவுட்டாக்கி சுருட்டி ஆஸ்திரேலியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா, கோலி எல்லாம் பிரச்சனை கிடையாது.. இந்திய அணிக்கு இப்போ இவர்தான் பிரச்சனை – டிம் பெயின்
குறிப்பாக முதல் ஓவரிலேயே ஷாஹீன் அப்ரிடியை நொறுக்கிய ஆஸ்திரேலியா 21 ரன்கள் குவித்தது கடைசியில் பாகிஸ்தானின் வெற்றியை பறிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக ஸ்பென்சர் ஜான்சன் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ள ஆஸ்திரேலியா சமீபத்தில் ஒருநாள் தொடரில் 22 வருடங்கள் கழித்து சந்தித்த தோல்விக்கு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.



