இவருக்கு எதிராக பவுன்சர் வீசிப்பாருங்க. இந்தமுறை அவரை வீழ்த்த முடியாது – ஆஸி கோச் விடுத்த சவால்

Smith
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை முடித்த கையோடு இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரில் விளையாட உள்ளனர். அதற்காக ஆஸ்திரேலியா சென்றடைந்த வீரர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு வருகிற 27-ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளர் இத்தொடர் குறித்தும் இந்திய பந்துவீச்சாளர்கள் ஸ்மித்தை எதிர்கொள்வது குறித்தும் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இத்தொடரில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் போது ஸ்மித்ற்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் பவுன்சர்களை பயன்படுத்தினால் அதில் ஒரு பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. அது அவருக்கு ரன்களை எளிதில் குவிக்க உதவும். இந்திய பவுலர்கள் அவருக்கு ஏதிராக அதிகமாக பவுன்சர் பயன்படுத்த நினைத்தால் அதனை வரவேற்போம். ஸ்மித் பவுன்சர்களை எதிர்கொள்வது சிரமம் என்று அனைவரும் பேசி வருகின்றனர்.

Smith

ஆனால் இதற்கு முன்னரும் இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு எதிராக பவுன்சர் வீசியுள்ளனர். அதை அவர் எதிர்கொண்டதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். இனி வரும் தொடர்களில் பவுன்சர்களை எளிதாக எதிர்கொள்வார். மேலும் அவரை ஆட்டம் இழக்கச் செய்வது இத்தொடரில் கடினம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Smith

சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர் ஸ்மித்திற்கு எதிராக தொடர்ச்சியாக பவுன்சர் பந்துகளை வீசி அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் அடுத்தடுத்த தொடர்களில் பந்துவீச்சாளர்கள் ஸ்மித்திற்கு எதிராக பவுன்சர்களை வீசி வருகின்றனர். எனவே அவரது குறை இதுதான் என்று அனைத்து அணிகளும் ஸ்மித்துக்கு எதிராக பவுன்சர் வீசுவதை கடைபிடித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் இந்த பேட்டியை அளித்துள்ளது இந்தியப் பவுலர்களுக்கு கொடுக்கப்பட்ட சவாலாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement