ஐ.பி.எல் 2020 : முதல் வாரத்தில் இந்த 6 முன்னணி வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் – விவரம் இதோ

ipl
- Advertisement -

மார்ச் மாதம் நடக்க இருக்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது பெரும் சிக்கலை சந்தித்து தற்போது செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடர் அனைத்தும் துபாய் மைதானங்களில் நடைபெறும். செப்டம்பர் 26 முதல் நவம்பர் முதல் வாரம் வரையிலான காலகட்டத்தை ஐபிஎல் நிர்வாகம் தேர்வுசெய்துள்ளது.

Ipl cup

- Advertisement -

இப்படியிருக்கையில் வெளிநாட்டு வீரர்களை எப்படி ஐபிஎல் தொடர் நடக்கும் நாட்டிற்கு அழைத்து வருவது என பிசிசிஐ கடுமையாக யோசித்து வருகிறது. ஒருபக்கம் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம் வெளிநாட்டு வீரர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாகிஸ்தானுடன் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாட இருக்கும் இங்கிலாந்து அந்த தொடர் முடிந்த பிறகு ஐபிஎல் தொடருக்கு திரும்ப இருந்தனர்.

Warner

ஆனால் தற்போது பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட முடிவு செய்துள்ளது. இந்த தொடர் செப்டம்பர் 16ம் தேதி முடிவடைவதால் 19 தேதி துவங்க இருக்கும் ஐ.பி.எல் தொடருக்காக அங்கு வந்து விடுவார்கள். இருப்பினும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தபடுவார்கள்.

Archer

பிறகு தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அந்த அணியில் இடம்பெறுவார்கள். அதற்கு குறைந்தபட்சம் பத்து நாட்கள் ஆகும். எனவே ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் முதல் வாரத்தில் ஐபிஎல் தொடரில் ஆட முடியாது என்று கூறப்படுகிறது. இதில் வார்னர், ஸ்மித், கம்மின்ஸ் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் பட்லர், பேர்ஸ்டோ, ஆர்ச்சர் போன்ற இங்கிலாந்து வீரர்களும் முதல் வாரத்தில் இணைய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Advertisement