அங்க சுத்தி இங்க சுத்தி தல தோனியின் இடமிருந்தும் கதையை சுட்ட தமிழ் இயக்குனர் – அட்லி விவரம் இதோ

Atlee
- Advertisement -

அட்லி இயக்கத்தில் கடந்த 25ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் பிகில் இந்தப் படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், ஆனந்த் ராஜ் மற்றும் யோகி பாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இல்ல இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

Bigle

- Advertisement -

வழக்கமாக வெவ்வேறு படங்களிலிருந்து கதைகளை மற்றும் காட்சிகளை எடுத்து தனது படத்தில் அட்லி பயன்படுத்தி வருவதால் அவரை காப்பி இயக்குனர் என்ற பெயரோடு ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனியையும் விட்டு வைக்கவில்லை என்பதை ஒரு புகைப்படத்தின் மூலம் ரசிகர்கள் நிரூபித்துள்ளனர்.

அது யாதெனில் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான எம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் ஒரு காட்சியை அவர் பிகில் படத்தில் வைத்துள்ளார். அதன்படி தோனி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் போது யுவ்ராஜ்க்கு முன்னதாக தான் களமிறங்க வேண்டும் என்று கூறி தனது ஜெர்ஸி எடுத்து மாட்டிக்கொண்டு படிக்கட்டில் இறங்கி வருவார்.

dhoni 1

அதே காட்சியை தற்போது திகில் படத்தில் விஜய் டி ஷர்ட் போட்டுகொண்டு மைதானத்தின் உள்ளே வருவார் இந்த இரண்டு படத்தையும் ஒன்றாக இணைத்து ரசிகர்கள் அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில தல தோனி மேலே கையை வைத்து விட்டார் அட்லீ என்பது போல அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement