அஸ்வின் தனது அணியின் சக தமிழக வீரர்களைப்பற்றி இப்படி பேசினாரா.!

aswin

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா மோதிய டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டியில் இந்திய அணி அபாரா வெற்றி பெற்றது. பல்வேறு சாதனைகள் நடந்தேறிய இந்த டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் ஜாகீர் கானின் சாதனையை முறியடித்தார். மேலும், இந்த போட்டியில் 3 தமிழக வீரர்கள் பங்குபெற்றத்தை சாதனையை பெருமையுடன் கூறியுள்ளார் அஸ்வின்.

ashwin

கடந்த ஜூன் 14 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் நிகழ்ந்துள்ளது. ஆப்கான்ஷிதான் அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் அந்த அணி வரலாற்று தோல்வியடைந்தது. இந்திய அணியின் இன்னிங்ஸ் வெற்றி, உமேஷ் யாதவ்வின் 100 வது டெஸ்ட் விக்கெட் அஸ்வனின் 316 வது விக்கெட் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த போட்டியில் தனது முதல் விக்கெட்டை எடுத்ததன் மூலம் அஸ்வின் 311 விக்கெட் எடுத்த இந்திய வீரர் சகீர் கான் சாதனையை முறியடித்தார்.

இந்த போட்டியில் தமிழக வீரர்கள் சார்பில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய் , அஸ்வின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் 8 ஆண்டுகள் கழித்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் தினேஷ் கார்த்திக் என்பது குறிப்பிடதக்கது. இந்த போட்டியில் தமிழக வீரரான முரளி விஜய் சதமடித்தது மற்றுமொரு சிறப்பு. இந்த போட்டியில் 57 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் 3 தமிழக வீரர்கள் இடம்பெற்றது சாதனை என்று அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

vijayaswin

இதற்கு முன்பு 1961ம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஏ.ஜி.மில்கா சிங், ஏ.ஜி.கிருபால் சிங் மற்றும் விவி.குமார் ஆகிய தமிழக வீரர்கள் இந்திய டெஸ்ட் போட்டியில் அணியில் இடம்பெற்றுள்ளனர். தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து தான் இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள் பங்கேற்றுள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகராம் பக்கத்தில் அஸ்வின் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.