நான் விளையாடிவரை எல்லா பேட்ஸ்மேன்களையும் எனது பந்துவீச்சின் மூலம் ஒரு கை பாத்தேன் – பாக் பவுலர் தற்பெருமை

Pak-1
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் விளையாட துவங்கிய காலத்திலிருந்து சர்ச்சைக்குரிய விஷயங்களை செய்ததில் வல்லவர்கள். அப்போது இந்திய வீரர்களை நேரடியாக வந்து வம்பிழுப்பது, சர்ச்சைக்குரிய செய்கைகளை இந்திய பாகிஸ்தான் எல்லையில் செய்வது என்று அடிக்கடி விளையாட்டு காண்பிப்பார்கள். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் சூதாட்டம் மிகவும் பிரபலமானது. தற்போது கூட உமர் அக்மல் சூதாட்ட பிரச்சனையில் சிக்கி 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

asif

- Advertisement -

அப்படித்தான் 2011 ஆம் ஆண்டு சூதாட்டத்தில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றவர் முகமது ஆசிப். இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அவரது காலத்தில் ஆடத் துவங்கிய உடன் மிகப்பெரிய பந்துவீச்சாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கிளன் மெக்ராத் ஒப்பிடப்பட்டவர். ஆனால் பணத்தின் மீது கொண்ட பேராசையின் காரணமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு இவர், சல்மான் பட், முகமது ஆமீர் ஆகிய மூவரும் இங்கிலாந்தில் சிறைதண்டனை பெற்று கிரிக்கெட்டில் வாழ்நாள் தடையும் பெற்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சூதாட்டம் மிகவும் எளிதானது எனவும், அது தொடர்பான சர்ச்சைக்குரிய பல விஷயங்களையும் கூறியுள்ளார் முகம்து ஆசிப். இதுகுறித்து தற்போது வெளியான அறிக்கையில் ஆசிப் கூறுகையில் :

asif

எனது கிரிக்கெட் வாழ்க்கை தற்போது வரையும் மோசமாக சென்றுவிட்டது. நன்றாக முடிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால் எனக்கு பல வருத்தங்கள் உள்ளது. இது நடந்தே தீரவேண்டும் என்று இருந்திருக்கிறது. பரவாயில்லை. ஆனால், நான் விளையாடிய வரையில் என்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

- Advertisement -

கிரிக்கெட் உலகை எனது பந்துவீச்சை மூலம் ஒரு உலுக்கு உலுக்கிணேன். இன்றும் கூட பல பேட்ஸ்மேன்கள் எனது பந்துவீச்சை பற்றிப் பேசுகின்றனர். என்னை மீண்டும் நினைவில் கொள்கின்றனர். எனக்கு முன்னதாக 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பல வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவர்கள் எல்லாம் தற்போது ஆடி வருகின்றனர்.

Asif 1

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலும் நிர்வாகிகளாக இருக்கின்றனர். ஆனால் எனக்கு மட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரண்டாவது வாய்ப்பு கொடுக்கவில்லை என்று மனம் நோக தெரிவித்துள்ளார் முகமது ஆசிப்.இவர் ஒரு மிகச் சிறந்த பந்துவீச்சாளர் 23 டெஸ்ட் போட்டியில் 38 ஒருநாள் போட்டிகளில் 11 டி20 போட்டிகளில் ஆடி 165 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கெவின் பீட்டர்சன் தான் விளையாடிய காலத்தில் சந்திக்க கஷ்டப்பட்ட பந்துவீச்சாளர் என்று ஆசிப்பை குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆசிப் தான் விளையாடிய காலத்தில் பல்வேறு முக்கிய பேட்ஸ்மேன்களுக்கும் தான் சிம்ம சொப்பனமாக விளயங்கியதாக அவர் தற்பெருமை பேசியுள்ளார்.

Advertisement