பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய அணியினரை சீண்டி தற்பெருமை அடித்து தம்பட்டம் போட்டுக்கொள்வதே வேலையாக இருக்கிறது. அதுவும் இந்த கரோனா சமயத்தில் சோயப் அக்தர் மற்றும் முகமது ஆசிப் போன்ற வீரர்கள் இந்திய வீரர்களை சீண்டி கொண்டே இருக்கின்றனர். இதில் அப்ரிடி உச்சகட்டம். அவரது பேட்டி ஓவ்வொரூன்றும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தடை செய்யப்பட்ட பந்து வீச்சாளர் மொகமது ஆசிப் இந்திய வீரர்களை பற்றி தற்போது பேசியுள்ளார். 2006 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தது. மூன்றாவது போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் 245 ரன்களும் இரண்டாவது ஆட்டத்தில் 565 ரன்கள் குவித்தது.
இந்திய அணி இந்த போட்டியில் 340 ஒரு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த்நிலையில் இதனை வைத்து சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார் முகமது ஆசிப். இதுகுறித்து அவர் கூறியதாவது…
மூன்றாவது போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து 245 ரன்கள் எடுத்தோம். ஆனால், அதற்கடுத்து பிடித்த இந்திய அணி அந்த ரன்களை கூட அடிக்கவில்லை. ஆனால், 8 வீரர்கள் இந்திய அணியில் பேட்ஸ்மேனாக இருந்தனர். அவர்களை எல்லாம் வீழ்த்தினோம். அந்த நேரத்தில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் எங்களது பந்து வீச்சை பார்த்து பயந்து போயிருந்தார்.
சோயப் அக்தர் அசுர வேகத்தில் வீசிக் கொண்டிருந்தார். அப்போது ஸ்கொயர் லெக் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த நான் அவரைப் பார்த்தேன். சச்சின் சோயப் அக்தரின் பவுன்சர் பந்துகளை கண்டு கண்ணை மூடிக்கொண்டார். இந்திய வீரர்கள் அனைவரும் பேக் ஃபூட்டில் விளையாடினார். யுவராஜ் சிங் மட்டும் சதம் அடித்தார். ஆனால் அந்த சதமும் அவர்களுக்கு உதவவில்லை.
இப்படித்தான் அவர்களை வெற்றி பெற்றோம் என்று சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார் முகமது ஆசிப். இவர் 2009ம் ஆண்டு ஸ்பாட் பிக்சிங் செய்து தண்டனை நிரூபிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் தடை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாகிஸ்தான் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காமல் பல சர்ச்சை கருத்துக்களை கூறுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் முகமது ஆசிப்.