- Advertisement -
ஆசிய கோப்பை

15 ஓவர்லயே சேனல் மாத்திட்டேன்.. இந்தியாவை வீழ்த்தும் தரம் அவங்க யார்கிட்டயும் இல்ல.. கங்குலி ஓப்பன்டாக்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் தலைமையிலான நடப்பு சாம்பியன் இந்தியா முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இத்தொடரில் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா எதிரணிகளை தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்பது பலருடைய கணிப்பாக இருக்கிறது. அதற்கேற்றார் போல் முதல் போட்டியிலேயே அமீரகத்தை 57க்கு சுருட்டிய இந்தியா 4.5 ஓவரில் இலக்கைத் தொட்டு 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

அடுத்து நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. அதனால் ரன்ரேட் அடிப்படையில் கடைசிப் போட்டிக்கு முன்பாகவே இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் போட்டியை 15 ஓவருக்கு மேல் பார்க்கவில்லை என ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கங்குலி வெளிப்படை:

மேலும் இந்திய அணியை அனைத்து நாட்களிலும் வீழ்த்தும் தரம் எந்த ஆசிய அணியிடமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி கங்குலி பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் நமக்கு பொருத்தமாக இல்லை என்பதை மரியாதையுடன் சொல்வேன். ஏனெனில் அந்த அணியில் தரம் தடுமாறுவதை என்னால் பார்க்க முடிகிறது”

“இத்தனைக்கும் இந்திய அணி நீண்டகாலமாக நட்சத்திரங்களாக ஜொலித்த விராட், ரோஹித் இல்லாமல் விளையாடுகிறது. இந்திய அணி கிரிக்கெட்டில் வெகுதூரம் முன்னோக்கி இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற ஆசிய அணிகள் ஓரிரு நாட்களில் நம்மை தோற்கடிப்பார்கள். மற்ற படி பெரும்பாலான நாட்களில் நாம் சிறந்த அணியாக இருக்கிறோம். அதனால் என்ன நடந்தது என்பதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமில்லை”

- Advertisement -

தரமான இந்தியா:

“சொல்லப்போனால் 15 ஓவருக்கு பின் நான் போட்டியைப் பார்ப்பதை நிறுத்தி விட்டு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக மான்செஸ்டர் சிட்டி விளையாடிய கால்பந்து போட்டியை பார்த்தேன். ஏனெனில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே எந்த போட்டியும் இல்லை. நாம் எப்போதும் வாசிம் அக்ரம், வகார் யூனிஸ், சயீத் அன்வர், ஜாவேத் மியான்தத் ஆகியோர் அடங்கிய பாகிஸ்தான் அணியைப் பற்றிய சிந்திப்போம்”

இதையும் படிங்க: அவங்களுக்கு அடிபணிந்து இந்தியாவும்.. இந்திய வீரர்களுமே அவமானப்பட்டாங்க.. பாகிஸ்தான் அல்ல.. அப்ரிடி விளாசல்

“ஆனால் இந்த நவீன கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியில் போட்டி காணக் கிடைக்கவில்லை. அதனால் நான் இந்தியா – ஆஸ்திரேலியா, இந்தியா – தென்னாப்பிரிக்கா போட்டிகளைப் பார்க்க விரும்புவேன். இலங்கை, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளை கூட பார்ப்பேன். ஆனால் கடந்த 5 வருடங்களாகவே இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளுக்கு நாம் எதிர்பார்ப்பு கொடுக்கிறோம். அது உடனடியாக உடைந்து ஒரு தலைப்பட்சமாக முடிகிறது” என்று கூறினார்

- Advertisement -