இந்திய தென்னாபிரிக்க தொடரை தொடர்ந்து கரோனா வைரசால் முக்கிய தொடர் தள்ளிவைப்பு – ரசிகர்கள் ஏமாற்றம்

india
- Advertisement -

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. உலகின் பல்வேறு நிகழ்வுகள் இதன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மக்கள் அதிகமாகக் கூடும் நிகழ்வுகள் அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து தொடர்கள் ரசிகர்கள் இல்லாமல் மூடிய மைதானத்தில் நடைபெற்று வருகிறது தற்போது இந்தியாவும் ஐபிஎல் தொடரை இவ்வாறு நடத்தலாம் என யோசித்து வருகிறது.

இந்நிலையில் வங்கதேசத்தில் மார்ச் 21 மற்றும் 22ம் தேதிகளில் நடைபெற இருந்த உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி இதன் காரணமாக தள்ளி வைக்கப்படுவதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரகுமானின் 100ஆவது பிறந்த நாளையொட்டி இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக இருந்தது.

asia-xi-vs-world-xi

இந்த போட்டியில் இந்தியா ,பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற பல்வேறு நாட்டு வீரர்கள் பங்கேற்க இருப்பதால் கரோனா வைரஸ் பரவ வாய்ப்புகள் அதிகம் என வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் நினைத்தனர். இதன் காரணமாக இந்த தொடரை தள்ளிவைத்துள்ளது.

- Advertisement -

மேலும் உலக லெவன் அணியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ,வெஸ்ட் இண்டீஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பதாக இருந்தது. பின்னர் கரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக இந்த போட்டியையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தள்ளிவைத்துள்ளது.

Ipl cup

இம்மாத இறுதியில் துவங்க இருந்த ஐ.பி.எல் தொடரில் கூட கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க விசா சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement