இந்திய அணி சார்பாக மிகப்பெரிய சாதனையை படைக்கவுள்ள தமிழக வீரர் அஷ்வின் – சாதனை விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று மதியம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சிறப்பான துவக்கத்தை அளிக்க இரு அணிகளும் பலத்த போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsENG 1

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஒன்றினை படைக்கும் வாய்ப்பு அவரின் கைக்கு எட்டி உள்ளது. இந்த போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்துவார் என்றும் நம்பலாம். அதன்படி இந்திய அணிக்காக இதுவரை 79 டெஸ்ட் போட்டிகளில் 413 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே திகழ்கிறார். அணில் கும்ப்ளே இதுவரை 132 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி 619 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து ஹர்பஜன்சிங் 103 டெஸ்டில் விளையாடி 417 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது இடத்திலும் உள்ளனர்.

Ashwin

இந்நிலையில் தற்போது தனது 80 ஆவது போட்டியில் பங்கேற்க உள்ள அஸ்வின் மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் 418 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்திற்கு செல்வார்.

அதுமட்டுமின்றி ஹர்பஜன் சிங்கை விட 23 டெஸ்ட் போட்டிகள் முன்னதாகவே இந்த சாதனையை நிகழ்த்த உள்ளதால் நிச்சயம் அவர் கும்ப்ளேவின் சாதனையையும் முறியடிக்க மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement