டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜனின் சாதனையை அசால்டாக முறியடிக்க காத்திருக்கும் அஷ்வின் – விவரம் இதோ

Ashwin-Harbhajan
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடரில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடரில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாடி இருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழற்பந்து வீச்சு மிகப் பெரிய பக்கபலமாக இருந்தது. இந்த டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டதால் இறுதி டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாட முடியவில்லை.

Ashwin

- Advertisement -

இதன் மூலம் பல சாதனைகளை அஸ்வின் படைத்திருக்கிறார். இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்துடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அந்த தொடரானது நாளை துவங்கவுள்ளது. இதில் அஸ்வின் இடம் பெற்றிருக்கிறார். இங்கிலாந்து தொடரில் அஸ்வின் மிகப்பெரிய சாதனை ஒன்றை முறியடிப்பதற்காக காத்திருக்கிறார்.

அஸ்வின் 74 போட்டிகளில் விளையாடி 337 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன்மூலம் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 4வது பவுலர் என்ற சாதனை படைத்திருக்கிறார். அனில் கும்ளே, கபில்தேவ், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு பிறகு அஸ்வின் 4-வது இடத்தை பிடித்திருக்கிறார். மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஹர்பஜன் சிங் இதுவரை இந்தியாவில் மட்டும் 265 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.

ஆனால் அஸ்வின் இந்தியாவில் 254 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஹர்பஜன் சிங்கின் சாதனையை அஸ்வின் முறியடிக்க இன்னும் 12 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. வருகின்ற தொடரில் மட்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் 12 விக்கெட்டுகள் எடுத்தால் மூன்றாம் இடத்தை தட்டிச் செல்வார்.

Ashwin-1

சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுவதும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் என்பதால் நாளைய போட்டியில் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இறங்கும் திட்டம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement