இப்படியா பண்ணுவ. பண்டின் மோசமான செயல்பாட்டால் தலையில் அடித்துக்கொண்ட அஷ்வின் – விவரம் இதோ

Pant

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 578 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 218 ரன்களை குவித்து அசத்தினார். அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்துள்ளது.

ishanth 1

மேலும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இந்த போட்டியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதன்பின்னர் புஜாரா மற்றும் பண்ட் ஆகியோர் இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். புஜாரா 73 ரன்களையும், ரிஷப் பண்ட் 91 ரன்களையும் குவித்து ஆட்டம் இழந்தனர்.

பேட்டிங்கில் பண்டின் செயல்பாடு சிறப்பாக இருந்தாலும் விக்கெட் கீப்பிங்கில் அவரது மோசமான செயல்பாடு இன்றும் தொடர்ந்தது. இன்றைய போட்டியின் அஸ்வின் வீசிய ஒரு பந்தில் ஏறிவந்து அடிக்க முயன்ற இங்கிலாந்து வீரர் லீச் அந்த பந்தை முற்றிலுமாக தவறவிட்டார். எளிதாக கைக்கு வந்த பங்தினை தடுமாறி கோட்டைவிட்ட ரிஷப் பண்ட் ஈசியாக செய்திருக்க வேண்டிய ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்டு சொதப்பினார்.

pant

இதனால் கடுப்பாகிய அஸ்வின் தலையில் அடித்துக்கொண்டு திரும்பினார். இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வர ரிஷப் பண்ட் இந்த மோசமான விக்கெட் கீப்பிங் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கீப்பிங்கில் சொதப்பினாலும் அவர் பேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -