முகமது ஷமியை தமிழில் கலாய்த்து பதிவினை வெளியிட்ட அஷ்வின் – பின்னணியில் உள்ள ருசிகரம்

Shami
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற “பாக்ஸிங் டே” டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்து உள்ளது. மேலும் இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி, ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா மாற்றும் முகமது ஷமி ஆகிய முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இந்த போட்டியை ரஹானேவின் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Gill

- Advertisement -

அந்த வகையில் தற்போது கடந்த போட்டியின் போது எலும்பு முறிவு காரணமாக அணியில் இருந்து விலகிய இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷமி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள். கேப்டன் ரஹானே, பும்ரா, உமேஷ் யாதவ், அஸ்வின் மற்றும் ஜடேஜா அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள்.

இந்திய அணியின் அடுத்த ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் மகிழ்ச்சி என அஸ்வினையும் அந்த போஸ்டில் டேக் செய்திருந்தார். இதனை கவனித்த அஷ்வின் அவருக்கு பதில் அளிக்கும் விதமாக “நன்றி தம்பி நீ இல்லன்னு ஒரு சின்ன வருத்தம்” டேக் கேர் என்று அந்த பதிவுக்கு பதில் அளித்துள்ளார். இதனை கவனித்த ரசிகர்கள் தம்பி என்பதை அஸ்வின் போட்டு அதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள பதிலில் அஸ்வின் ஏற்கனவே ஒரு வீடியோவில் ஷமி உடனான தமிழ் தொடர்பு குறித்து பேசியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். அதில் ஒரு முறை ஷமி மோசமாக பந்துவீசி கொண்டிருந்தபோது தான் சென்று ஷமியை தமிழில் திட்டியதாகவும் அதற்கு திருப்பி கேட்ட ஷமி என்ன சொல்கிறீர்கள் ? என்று திருப்பி ஷமி கேட்டதற்கு நான் உன்னை தமிழில் திட்டினேன் என்று கூறியுள்ளார்.

அதன் பின்னர் கோவமாக சென்று அடுத்த பந்திலேயே ஷமி விக்கெட் எடுத்தார். அதிலிருந்து நான் எப்போது அவரிடம் தமிழில் பேசினாலும் அடுத்து சிறப்பான ஆட்டத்தை ஷமி வெளிப்படுத்துவார் ஐபிஎல் போட்டிகளிலும் இது எதிரொலித்தது என்று அஸ்வின் கூறியுள்ளார். எனவே எப்போது ஷமியுடன் பேசும்போதும் அவர் தமிழில் அவரை கலாய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ள அஷ்வின் தற்போது ட்வீட்டிலும் தமிழில் பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement