நானும் நித்யானந்தாவின் கைலாச நாட்டிற்கு போகணும். விசா கொடுக்க சொல்லுங்கள் – அடம் பிடிக்கும் இந்திய வீரர்

Nithi

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நித்யானந்தா தியான பீடம் என்கிற ஆசிரமத்தை அமைத்து ஆன்மீக வழிபாடுகள் மூலம் பல கேடி வேலையை செய்து வந்தவர் நித்யானந்தா இந்நிலையில் அவர் பாலியல் துன்புறுத்தல், சிறார்களை அடிமைப்படுத்துதல் மற்றும் பண மோசடி என பல்வேறு வழக்குகள் தற்போது அவர் மீது எழுந்துள்ளன.

nithi 1

மேலும் இந்தியாவில் உள்ள அவருடைய ஆசிரமங்கள் அனைத்திலும் இது போன்ற பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல்கள் போன்றவை தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள அவரது ஆசிரமம் இழுத்து மூடப்பட்டது. தற்போது போலீஸ் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை பிடிக்க பிடிவாரன்ட் உத்தரவிட்டுள்ள காரணத்தால் தற்போது வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அவருடைய பாஸ்போர்ட் சென்ற ஆண்டோடு காலாவதியாகி விட்டதால் அவர் எங்கும் சென்றிருக்க முடியாது என்று ஒரு தரப்பினர் கூறினாலும் நித்யானந்தா தற்போது அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியில் ஒரு தீவு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளதாகவும், அந்த தீவிற்கு கைலாசா என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் அந்த தீவிற்கு தனிக்கொடி தனி பாஸ்போர்ட் என ஒரு நாடாகவே அதனை உருவாக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வீரரான அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் கைலாச நாட்டிற்கு எப்படி விசா வாங்குவது அதன் நடைமுறை என்ன ? என்று நித்யானந்தாவை கிண்டல் செய்யும் விதமாக தனது பதிவினை பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் பல விதமான பதில்களை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -