தோனி நெனச்சி சீன் போட்ட அஷ்வின். அவமானப்பட்டு வெளியேறிய தருணம் – விவரம் இதோ

Ashwin

சையத் முஷ்டக் அலி 20 தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடக அணியும், தமிழ்நாடு அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணி இறுதி வரை வெற்றிக்காக கடுமையாக போராடியது.

ashwin 1

இந்நிலையில் இந்த போட்டியின் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அந்த கடைசி ஓவரை எதிர்கொண்டார். தமிழ்நாட்டு வீரர் அஸ்வின் அந்த ஓவரை வீச போவது சுழற்பந்து வீச்சாளர் தான் என்பதை முடிவு செய்ததால் தோனியை போல அதிரடியாக தனது ஹெல்மெட்டை கழட்டி விட்டார்.

மேலும் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு அடித்து தமிழக அணியை வெற்றிபெற வைக்க சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். மேலும் நான்கு பந்துகளுக்கு 5 ரன்களை தேவைப்பட்டதால் அவர் போட்டியை வென்று விட்டோம் என்று முன்கூட்டியே முன்கூட்டியே தனது வெற்றி கொண்டாட்டத்தை துவங்கினார். ஆனால் மீதமிருந்த 4 பந்துகளில் அவர்களால் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் கர்நாடக அணி வெற்றி பெற்றது.

மேலும் கடைசி பந்தில் ரன் ஓடும் போது தனது கால் பேடை கழட்டினால் வேகமாக ஓட முடியும் என்று நினைத்து அவரது பேடை கழட்டி விட்டு ரன் ஓடினார். அப்படி அவர் ஓட முயன்றும் அவரால் ஒரு ரன் தான் ஓட முடிந்தது. இந்த போட்டியில் கடைசி ஓவரின் முதல் 2 பந்தில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று செம சீன் போட்ட அஸ்வின் கடைசியில் தோல்வியுற்றதால் சோகத்துடன் வெளியேறினார். அஷ்வினின் இந்த செயல் சற்று சலிப்பை ஏற்படுத்தியது என்பது உண்மை.

- Advertisement -