இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த சிறப்பான ஆட்டத்திற்கு இதுவே காரணம் – மனம்திறந்த அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இத்தொடரை இந்திய அணி 1 க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

axar 2

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி இரண்டாவது இன்னிங்சில் 106 ரன்கள் அடித்து பேட்டிங்கிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி பெரிதும் விமர்சிக்கப்பட்ட இந்த சேப்பாக்கம் மைதானத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்துக் காண்பித்தார்.

போட்டிக்கு பிறகு ஆட்டநாயகன் விருது பெற்ற அஸ்வின் பத்திரிகையாளர் சந்திப்பில் தான் எவ்வாறு பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டேன் என்றும் இங்கிலாந்து அணி எதனால் தோல்வியை தழுவியது என்பது குறித்தும் பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி நெருக்கடியில் இருக்கும் போது நான் களமிறங்கினேன். பவுலர்களை அழுத்தத்திற்கு உட்படுத்தினால் மட்டுமே நீண்ட நேரம் நிலைத்து விளையாட முடியும் என்பதால் துவக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் செய்தேன்.

ashwin 2

பவுலர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கினேன். எப்போதும் போராடி சாதித்துக் காட்ட வேண்டும் என்பது என்னுடைய குணம் அப்படித்தான் இந்த ஆட்டத்திலும் பேட்டிங் மூலம் நான் எனது திறமையை வெளிப்படுத்தினேன். பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் தொழில்நுட்பரீதியில் நிறைய கற்றுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி துணை கேப்டன் ரகானே பேட்டிங் குறித்த ஆலோசனைகளை வழங்கினார். இந்த மைதானத்தில் பழைய முறையில் பேட்டிங் செய்தால் சிறப்பாக விளையாட முடியும் என்ற டெக்னிக்கை வைத்தே நான் சிறப்பாக பேட்டிங் செய்தேன்.

Ashwin 1

அதுமட்டுமின்றி சேப்பாக்கம் மைதானத்தில் நான் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன் எனவே இங்கு எப்படி விளையாட வேண்டும் என்பது எனக்கு தெரியும். மேலும் நல்ல மனநிலையுடன் போட்டியை எதிர்கொண்டதால் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது. மைதானம் சுழலுக்கு சாதகமாக இருந்ததால் இங்கிலாந்து வீரர்களால் பேட்டிங் செய்ய முடியவில்லை. ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் இதுவே அவர்களின் தோல்விக்கு காரணம் என்றும் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement