உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்திய அணிக்கு சவால் இது ஒன்றுதான். ஆனால் அதை நாங்க சமாளிச்சிடுவோம் – அஷ்வின் பேட்டி

Ashwin

ஐசிசி நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றன. அதனைத் தொடர்ந்து தற்போது ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் சவுத்தாம்ப்டன் நகரில் மோத இருக்கின்றன. இந்த இறுதிப் போட்டிக்காக ஏற்கனவே நியூசிலாந்து அணி இங்கிலாந்து சென்று அடைந்தது.

INDvsNZ

இந்நிலையில் தற்போது இந்திய அணி ஜூன் இரண்டாம் தேதி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் ? எந்தெந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் ? என்பது குறித்த கருத்துகளை பல்வேறு முன்னாள் வீரர்களும் வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த இறுதிப் போட்டி குறித்து பேசுகையில் : இந்திய அணி வீரர்கள் அயல்நாட்டு பிட்ச்களில் விளையாடும்போது அந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப விரைவில் செட் ஆகிவிடுவார்கள் ஆஸ்திரேலிய தொடரின் போது இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக தங்களை தகவமைத்துக் கொண்டு அங்கு தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

IND

அதே போன்று தற்போது இங்கிலாந்திலும் இந்திய அணி நிச்சயம் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு விரைவிலேயே செட் ஆகிவிடும் என்று அஸ்வின் கூறினார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் : இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் நாங்கள் பயிற்சியை ஆரம்பித்து விடுவோம். ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடிய பிறகு நாங்கள் யாரும் கிரிக்கெட் விளையாட வில்லை என்பதால் நிச்சயம் இந்த விஷயம் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

IND

அவர் கூறியதன் பின்னணி யாதெனில் நியூசிலாந்து அணி இந்த டெஸ்ட் இறுதி போட்டிக்கு முன்னர் இங்கிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. ஆனால் இந்திய அணி நேராக இறுதிப் போட்டியை எதிர்கொள்ள உள்ளதால் அது தங்களுக்கு சவாலாக இருக்கும் என அஷ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement