கோலி எந்த கோரிக்கையும் வைக்கல. இந்த முறை மிஸ் ஆயிடுச்சு ஆனா அடுத்த முறை – அஷ்வின் பளீர் பேட்டி

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. இந்த இறுதிப் போட்டி மழை காரணமாக இரண்டு நாட்கள் முழுவதும் பாதிக்கப்பட்டாலும் போட்டியின் 6-வது நாளில் இந்த போட்டி முழுவதுமாக நடைபெற்று முடிந்தது.

nz

- Advertisement -

எளிதாக டிரா செய்திருக்க வேண்டிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி படு மோசமாக விளையாடி தோல்வியில் முடிந்தது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை எழுப்பியது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்து பேசிய விராத் கோலி இறுதிப்போட்டி ஒரு போட்டியாக இல்லாமல் 3 போட்டியாக இருந்திருந்தால் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க சரியாக இருந்திருக்கும் என்று அவர் கருத்துக்களைப் கூறியதாக பலரும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

மேலும் கோலி தோல்வியடைந்த விரக்தியில் தான் இப்படி பேசுகிறார் என்று பலரும் அவரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இந்த கருத்துக்கு பதில் அளித்த இந்திய அணியின் முன்னணி வீரரான அஸ்வின் கூறுகையில் : கோலி கூறியதை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். கோலி 3 போட்டிகள் கொண்ட பைனல் வேண்டும் என்ற கோரிக்கை எல்லாம் வைக்கவில்லை.

kohli 2

இறுதிப் போட்டி முடிந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி யாதெனில் இறுதிப்போட்டியில் என்ன வித்தியாசம் செய்திருக்கலாம் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில் : பைனல் மூன்று போட்டிகளாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் கூறினார். ஆனால் அவர் மற்றபடி 3 போட்டிகள் கொண்ட தொடர் நடத்தியே ஆக வேண்டும் என்று கோரிக்கை எல்லாம் விடுக்கவில்லை என தெளிவாக எடுத்துரைத்தார்.

kohli 1

அது மட்டுமின்றி தொடர்ந்து பேசிய அஸ்வின் : இந்த தோல்வியால் ரசிகர்கள் நிச்சயம் ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள். லாக்டவுனுக்கு பிறகு ஒரு நல்ல செய்தியை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் இந்த தோல்வி அவர்களை மிகவும் பாதித்து இருக்கும். ஆனால் அடுத்த முறை இதுபோன்று நடக்காது. நிச்சயம் அடுத்து வரும் ஐ.சி.சி தொடரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி அடைவோம் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement