கும்ப்ளேவின் 619 விக்கெட்டுகள் சாதனையை முறியடிக்க முடியுமா ? – சுற்றிவளைக்காமல் பதிலை சொன்ன அஷ்வின்

Kumble
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்றாவது பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். இந்திய அளவில் நான்காவது வீரராகவும் வேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனை பட்டியலில் அவர் முரளிதரனுக்கு அடுத்த இடத்தை பிடித்தார். மேலும் ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் சேர்த்து 600 விக்கெட்டுகளை கடந்துள்ளார்.

Ashwin

- Advertisement -

இதுவரை 77 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 401 ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த சாதனை காரணமாக தற்போது அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. மேலும் அஸ்வின் இந்த 400 விக்கெட்டோடு மட்டுமில்லாமல் 500, 600 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துவார் என்று ரசிகர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்திய அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளரான கும்ப்ளேவின் 619 விக்கெட்டுகள் சாதனையை அஸ்வின் முறியடிக்க வாய்ப்பு உள்ளதா என அஸ்வினிடம் நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் : கும்ப்ளேவின் சாதனையை எட்ட வேண்டும் என்றால் இன்னும் 218 விக்கெட்டுகள் தேவை. என்னை பொறுத்தவரை இது போன்ற சாதனைகளைப் பற்றி சிந்திப்பதை நான் நீண்ட காலத்திற்கு முன்பே நிறுத்திவிட்டேன்.

Ashwin

ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் என்னால் என்ன செய்ய முடியும் ? அணிக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும் ? எனது ஆட்ட திறனை எவ்வாறு மேம்படுத்துவது ? எனது பங்களிப்பை எவ்வாறு வழங்குவது ? என்பதை மட்டுமே யோசிக்கிறேன். அதில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன். தனிப்பட்ட முறையிலும், கிரிக்கெட் வீரராகவும் மேலும் சிறந்த முறையில் செயல்படுவதை எதிர்நோக்குகிறேன்.

Ashwin

இதைத்தான் கடந்த 15 ஆண்டுகளாக செய்து வருகிறேன். அதனை அப்படியே தொடர விரும்புகிறேன் என்றும் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அவர் நிச்சயம் கும்ப்ளேவின் சாதனை எட்டும் ஆசையெல்லாம் இல்லை என்றும் முடிந்தவரை தன்னால் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை மட்டுமே எண்ணமாக கொண்டுள்ளதாக அழுத்தம் திருத்தமாக அஷ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement