இங்கிலாந்து அணியை ஜெயிக்கணுனா கோலி மட்டும் போதாது இவங்களும் கை கொடுக்கனும் – அஷ்வின் பளீர் பேட்டி

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டது. அதன் பின்னர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இங்கிலாந்து மண்ணில் இதுவரை இந்திய அணி பெரிதளவில் சாதித்தது இல்லை.

- Advertisement -

டிராவிட் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதற்கு பின்னர் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை. இதன் காரணமாக இந்த சீசனில் இந்திய அணி இங்கிலாந்து தொடரை வீழ்த்த மும்முரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் இந்திய அணி 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போது 4 க்கு 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. அந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி தனது அற்புதமான ஆட்டம் காரணமாக 593 ரன்களை அடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் அந்த தொடருக்கு பழிதீர்க்கும் விதமாக இந்த இங்கிலாந்து தொடரை இந்திய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இங்கிலாந்து தொடர் குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது : இங்கிலாந்து மண்ணில் அவர்களைக் கட்டுப்படுத்துவது சுலபமான விடயம் கிடையாது. அவர்களுடைய கண்டிஷனில் அவர்கள் தான் சிறந்தவர்கள் என்பதை காண்பிப்பார்கள். ஆண்டர்சன் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார்.

Ashwin 1

இங்கிலாந்தில் உள்ள மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால் அனைவரும் சிறப்பாக பந்து வீசுவார்கள். இப்படி அவர்கள் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். விராத் கோலி மட்டும் இல்லாமல் அவருடன் சேர்ந்து மற்ற பேட்ஸ்மேன்களும் இணைந்து ரன் குவித்து விட்டால் இங்கிலாந்து அணியை அவர்களது மண்ணில் வீழ்த்த அருமையான வாய்ப்பு நமக்கு உள்ளது என அஸ்வின் கூறியுள்ளார்.

Ashwin

மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில் : நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளேன். வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி உள்ளேன். இடது கை பேட்ஸ்மேன்களை போன்று வலதுகை ஆட்டக்காரர்களையும் வீழ்த்தியுள்ளேன். எனவே இந்த தொடரில் எனது பந்துவீச்சு சிறப்பாக இருக்கும் என தான் நம்புவதாக அஸ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement