நான் சதம் விளாசும் முன் சிராஜ் என்னிடம் கூறிய வார்த்தைகள் என்னை நெகிழவைத்தன – அஷ்வின் ஓபன்டாக்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்த ஒரு போட்டி என்றே கூறலாம். ஏனெனில் முதல் இன்னிங்சின் போது இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் அடித்ததும், அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ரசிகர்களுக்கு விருந்து அளித்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிலும் சென்னை மண்ணின் மைந்தனான அஸ்வின் பேட்டிங்கில் சதமடித்து அசத்த அவர்களது குடும்பம் பெவிலியனிலிருந்து அதை ரசித்தனர்.

Ashwin

அதுமட்டுமின்றி இரண்டாவது இன்னிங்சிலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் இந்த போட்டியில் சதமடித்து அதுமட்டுமின்றி 8 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். சென்னை மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அஷ்வின் தான் சதம் அடித்த போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

சென்னை போட்டியில் நான் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்கள் என்னை ஒரு ஹீரோ போல உணர வைத்தார்கள். மேலும் நான் என் குழந்தைகளுக்கு முன்னிலையில் மூன்றாவது நாளில் இந்த சதத்தை அடித்தது மகிழ்ச்சி அளித்தது. இரண்டாவது நாளில் 5 விக்கெட் எடுக்கும் பொழுது என் குடும்பத்தார் எனது ஆட்டத்தைப் பார்த்து கொண்டிருந்தார்கள். இனிமேல் நான் சென்னையில் இதுபோன்று ஒரு போட்டியில் விளையாடுவேனா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இன்றைய போட்டி எனக்கு மறக்க முடியாத போட்டியாக அமைந்தது என்று அஷ்வின் கூறினார்.

ashwin 1

மேலும் தான் சதம் அடித்தது குறித்து குறிப்பிடுகையில் : நான் என்பது ரன்களை கடந்த உடனே சதம் அடிப்பேன் என்று உறுதியாக நம்பினேன். அதன் பின்னர் நான் சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் மறுமுனையில் சிராஜ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். நான் சதம் அடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர் பந்துகளை தடுத்து விளையாடினார் .பின்னர் ஓவரின் இடைவேளையின் போது என்னிடம் வந்த சிராஜ் : நீங்கள் சதம் அடிக்கும் வரை நான் ஆட்டம் இழக்க மாட்டேன்.

siraj

அதுவரை பந்துகளை தடுத்து ஆடுகிறேன், நீங்கள் நிச்சயமாக சதம் அடிப்பீர்கள் அதை நாம் கண்டிப்பாக இணைந்து கொண்டாடுவோம் என்று என்னிடம் கூறினார். அதேபோன்று நான் சதம் அடித்ததும் என் சதத்தை சிராஜ் கொண்டாடியது என்னை நெகிழ வைத்தது என அஷ்வின் கூறினார். மேலும் அஷ்வின் சதம் அடிக்கும் வரை பொறுமையாக விளையாடி வந்த சிராஜ் அஸ்வின் சதம் அடித்த பிறகு இரண்டு சிக்ஸர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement