நல்லா விளையாடுனாலும் தென்னாப்பிரிக்க அணி இதனால தான் கஷ்டப்படுறாங்க – அஷ்வின் பேட்டி

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய அடுத்ததாக விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

Maharaj-1

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் பந்து வீச்சாளர் அஷ்வின் கூறியதாவது : இது ஒரு நல்ல பிட்ச் பிலாண்டர் அருமையாக பேட் செய்தார். அவர் பேட்டிங் செய்யும் விதம் பார்ப்பதற்கே அருமையாக இருந்தது. மேலும் கடைசி நேரத்தில் பிலாண்டர் மற்றும் மகாராஜ் சத்தத்தைத் தாண்டி கூட்டணி அமைத்து சிறப்பாக ஆடினார்கள்.

- Advertisement -

நான் அப்போது பந்துவீசும் போது கூட எனக்கு வெறுப்போ, சோர்வோ ஏற்படவில்லை மாறாக திரும்பத் திரும்ப பந்து வீசுவதற்கான உத்வேகத்தைத் தந்தது. தென் ஆப்பிரிக்கா சிறப்பாக பேட்டிங் செய்வதாகவே நான் உணர்கிறேன். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் அவர் அவர்கள் நல்ல கிரிக்கெட் விளையாடி உள்ளார்கள்.

சில வேளைகளில் 150 முதல் 160 ஓவர்கள் வரை பந்து வீசி விட்டு உடனே பேட்டிங் இறங்குவது என்பது கடினமான விடயமாகும். அதனால் அவர்கள் நிச்சயம் களைப்படைந்து இருப்பார்கள் அவர்களுடைய கஷ்டம் எனக்கு புரிகிறது. அதனால் தான் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று நினைக்கிறன். அவர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி உள்ளார்கள் எனினும் இந்த போட்டியில் எங்கள் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement