டெஸ்ட் போட்டியில் தோனி ஓய்வு பெறும்போது என்ன செய்தார் தெரியுமா ? – ரகசியத்தை உடைத்த அஷ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி இரவு தனது ஓய்வு அறிவிப்பினை இன்ஸ்டாகிராம் மூலம் மிக எளிமையாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பை அடுத்து கிரிக்கெட் உலகம் பரபரப்பானது. அவரின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியது மட்டுமின்றி அவரது நினைவுகளையும் பகிர ஆரம்பித்து அவருக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Dhoni

தோனியின் ஓய்வு முடிவினை அடுத்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வர தற்போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் தோனி உடனான தனது அனுபவம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி ஓய்வு பெற்ற போது நடந்த சம்பவத்தை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து கொண்ட இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறுகையில் : எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது நானும் தோனியும் அவரது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருந்தோம்.

Dhoni

அப்போது ஆட்டத்தை டிராவை நோக்கி கொண்டு செல்ல நாங்கள் இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தோம். இருப்பினும் அந்த போட்டியில் தோல்வியே அடைந்தோம். போட்டி முடிந்ததும் ஒரு ஸ்டம்பை மட்டும் எடுத்துக் கொண்டு அமைதியாக தோனி வெளியேறினார். அதன் பிறகு அன்று இரவு சுரேஷ் ரெய்னா, இஷாந்த் சர்மா மற்றும் நான் ஆகியோர் தோனியுடன் அமர்ந்து இருந்தோம்.

- Advertisement -

dhoni

அன்று அவர் இரவு முழுவதும் தனது கடைசி போட்டியில் பயன்படுத்திய டெஸ்ட் சீருடையை அணிந்து கொண்டுதான் தூங்கினார். வேறு உடையை அவர் மாற்றவில்லை மேலும் அவர் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. அதன் பின்னரே டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். எங்களுக்கு அது அதிர்ச்சிகரமாக இருந்தது என்று அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது/