பந்தில் எச்சை தேய்க்கக்கூடாதா ? அப்போ இனிமேல் விக்கெட் விழுந்தால் இப்படி கொண்டாடலாம் – அஷ்வின் கூறிய சூப்பர் ஐடியா

கொரோனா வைரஸ் எச்சில் மூலம் காற்றில் எளிதாக பரவும் தன்மை உடையதால் இனிவரும் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் பந்தை தேய்க்க உமிழ் நீரை பயன்படுத்தக் கூடாது என்ற விதியை கொண்டுவந்து அதனை தடை செய்ய பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைவரும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

Ashwin-Harbhajan

இந்நிலையில் இந்த புதிய விதி குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் உரையாடலில் சில விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறும்போது : என்னை பொருத்தவரை பந்தில் உமிழ் நீரை பயன்படுத்துவது என்பது ஒரு இயல்பான விடயம் அதனால் இனிமேல் அதை செய்யாமல் இருக்க தனியாக பயிற்சி எடுக்க வேண்டும்.

ஏனெனில் நாம் அதனை செய்து பழக்கப்பட்டவர்கள் என்பதால் நம்மை அறியாமலேயே நாம் உமிழ் நீரின் மூலம் தந்தை தேய்க்க செல்வோம். ஆனால் அதனை செய்யாமல் இருக்க நிச்சயம் தனியாக பயிற்சி எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் கொரோனா பரவல் பற்றி பேசிய அஸ்வின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மிக முக்கியமான நடவடிக்கையாக சமூக விலகல் பார்க்கப்படுகிறது.

Ashwin 1

எனக்கு எழுபது எண்பதுகளில் நடந்த கிரிக்கெட் போட்டிகளை அது ஞாபகப்படுத்துகிறது. காரணம் என்னவென்றால் அப்போது பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுத்தார் வீரர்கள் ஒன்றுகூடி கொண்டாட மாட்டார்கள். மாறாக அவர் நின்ற இடத்திலேயே கைகளைத் தட்டிக்கொண்டு கொண்டாடுவார்கள் அதேபோன்று காலம் மாற மாற அனைத்தும் மாறியது.

- Advertisement -

தற்போது நாம் நம்முடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதிற்கும், இயற்கை மதிக்கவும் கொரோனா கற்றுக் கொடுத்திருக்கிறது. நாம் எப்போதும் முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறோம். இதற்காக இயற்கையை அழிக்கும் இதுபோன்ற விடயங்கள் நம்மை கொஞ்சம் பின்னோக்கி நகர வைத்து இருக்கிறது.

Ashwin

இது நாம் இயற்கைக்கு தேவையானவற்றை காது கொடுத்து கேட்கவே கொடுக்கப்பட்ட நேரம் என்றும், அதனால் இந்த பாதிப்பிற்கு காரணம் இதுவே என்றும் இயற்கைக்கு செவிசாய்த்து மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.