நான் நல்லா விளையாடானாலும் என்னை அணியில் சேக்க மாட்றாங்க – புலம்பிய இந்திய நட்சத்திரம்

Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் என்று நாம் நினைத்தால் உடனே நம் கண்ணுக்கு வருவது முதலில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் தான். அவர்கள் இருவரும் பல ஆண்டுகள் சிறப்பான பந்து வீச்சை வழங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்து தரமான ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்று நாம் கணக்கில் கொள்ளும்போது நிச்சயம் தற்போது உள்ள இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் நம் ஞாபகத்திற்கு வருவார்.

Ashwin

- Advertisement -

அந்த அளவிற்கு அஷ்வின் சிறப்பான பந்துவீச்சை இதுவரை வெளிப்படுத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக விக்கெட்டுகளை வீழ்த்தி பல சாதனைகளை தன்னுள் வைத்திருக்கும் அஸ்வின் இந்திய மண்ணில் மட்டும் ஜாம்பவானாகவும், வெளிநாட்டு மண்ணில் சற்று தடுமாறவும் தான் செய்கிறார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் பொறுத்தவரை அவருக்கு ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு குறித்து தற்போது அஷ்வின் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : அணியில் இருந்து ஓரங்கட்டப்படும்போது மனச் சோர்வும், ஏமாற்றமும் ஏற்படும். ஆனால் விளையாட்டில் இது ஒரு அங்கம் அதற்கு நல்ல எடுத்துக் காட்டு தற்போது பிராட் அணியில் இருந்து நீக்கப்பட்டது. முதல் போட்டியில் நீக்கப்பட்ட பிறகு இரண்டாவது போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Ashwin 1

அதே போன்று நானும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி உள்ளேன். 5 விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவேன் அல்லது அணியில் இருந்து நீக்கப்படுவது என்றே இருக்கிறேன். ஆனால் எதிர்மறை எண்ணம் என் மனதிற்குள் காலூன்ற நான் அனுமதிக்க அனுமதிக்கவில்லை என்றார். 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை .

ashwin 1

அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவர் வெளியிலேயே உட்கார வைக்கப்பட்டார். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி சிறப்பாக விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவரை 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 365 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement