தோனி என்னை நம்பி அதை கொடுத்தாரு, நான்தான் வீணாக்கிட்டேன் – அஷ்வின் வருத்தம்

Ashwin
- Advertisement -

சென்னை சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து வரும் தோனிக்கு சென்னை அணியில் பிடித்த ஆஸ்தான வீரர்களில் அஸ்வினும் ஒருவர். எப்பொழுதும் சென்னை அணியில் ரெய்னா, ஜடேஜா, அஸ்வின் ஆகிய மூவருக்கும் பேராதரவு அளித்து தனது ஆஸ்தான வீரர்களாக தக்க வைத்திருந்த தோனி இந்திய அணியில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய போது கோலி இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து அஸ்வினை ஓரங்கட்டினார்.

- Advertisement -

அதன்பின்னர் அஸ்வின் தரமான ஸ்பின்னர் என்பதால் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். ஜடேஜாவையும் ஓரம்கட்ட நினைத்த கோலி ஆனால் ஜடேஜாவின் சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங், பீல்டிங் என கலக்கியதன் காரணமாக அவரை அணியில் தொடர்ந்து வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக சென்னை அணிக்கு விளையாடி வந்த அஸ்வின் கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார்.

அதன் பின்னர் தற்போது இந்த வருட சீசனுக்கு டெல்லி அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் சிஎஸ்கே குறித்தும் தல தோனி. அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு தான் அளித்த ஏமாற்றத்தை குறித்தும் பேசியுள்ளார் இதுகுறித்து அஸ்வின் குறிப்பிடுகையில் : 2010ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியும் விக்டோரியா அணியும் மோதின.

பரபரப்பாக நடந்த இந்த போட்டி டையில் முடிந்தது. உடனே போட்டி முடிந்ததும் சிறிய அளவில் மீட்டிங் நடந்தது. அந்த சூப்பர் ஓவரை யார் வீசுவது என்பது குறித்துதான் அந்த மீட்டிங் நடைபெற்றது பயிற்சியாளர் பிளம்மிங் ஓடிவந்து தோனியிடம் பேசி அணி வீரர்களுடன் கலந்துரையாட உடனே நான் அந்த சூப்பர் ஓவரை வீசுகிறேன் என்று தானாக முன்வந்து கை தூக்கினேன்.

- Advertisement -

சென்னை அணியில் அப்பொழுது நான் இளம் வீரர் சீனியர் வீரர்களாக முரளி கார்த்திக், பொலிஞ்சர் போன்ற வீரர்கள் இருக்கும்போது சூப்பர் அவரை நான் வீசுகிறேன் என்று கூறியதும் தோனி கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னிடம் பந்தை கொடுத்தார். வேறு எந்த கேப்டனாக இருந்து இருந்தாலும் சூப்பர் அவரை ஒரு ஸ்பின்னர் இடம் கொடுக்க யோசித்து இருப்பார்கள். ஆனால் எந்த தயக்கமும் இன்றி என்மீது நம்பிக்கை வைத்து சூப்பர் ஓவர் வீசும் வாய்ப்பை கொடுத்தார்.

ashwin 1

அணிக்கு வெற்றி தேடித்தர இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றே நான் கை தூக்கினேன். ஆனால் இறுதியில் தோனி என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நான் வீணடித்து விட்டேன் ஏனெனில் அந்த ஓவரை வீசிய போது டேவிட் ஹசி சிறப்பாக எதிர்கொண்டு சிக்ஸர்களை விளாசி அதிக ரன்களை ஸ்கோர் செய்தார் அப்போது என்னை நானே திட்டிக் கொண்டேன். தானாக முன்வந்து இவ்வாறு செய்து விட்டாயே, உன்னை நம்பிய கேப்டனையும் ஏமாற்றி விட்டாயே என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டதாக தற்போது அஸ்வின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement