சென்னை டெஸ்ட் நடந்த இந்த விடயத்தை நான் நெனச்சி கூட பாக்கல – மனம்திறந்த தொடர் நாயகன் அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் குவிக்க அடுத்ததாக முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 365 ரன்களை குவித்தது. பின்னர் 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி சென்னை டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இந்திய அணியின் முன்னணி வீரரான அஷ்வினுக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு பரிசளிப்பு விழாவின் போது பேசிய அஷ்வின் கூறுகையில் : இந்த பயணம் நீண்ட நெடியது. பல அணிகளை வென்றதன் மூலமாக இது சாத்தியமாகியுள்ளது.

அணி நிர்வாகம் என்மீது வைத்த நம்பிக்கையை நான் 100% பூர்த்தி செய்து உள்ளதாக நினைக்கிறேன். அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை எனக்கான பலமாக அமைந்தது. சென்னை டெஸ்டில் சதம் விளாசுவேன் என எண்ணவில்லை. அந்த ரன்கள் என் கெரியரின் சிறந்த இன்னிங்ஸில் ஒன்று. (குறிப்பு : இந்த ஆட்டத்தில் 100 ரன்கள் மட்டுமின்றி 5 விக்கெட்டுகள் ஆகியவற்றை அவரின் குடும்பம் மற்றும் குழந்தைகள் முன் செய்திருந்தார்.

Ashwin

இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணிக்காக அபரிமிதமான பங்களிப்பை கொடுத்து வருகிறார். அவர் மிகச்சிறந்த வீரர். அண்ணா என என்னை பண்ட் அழைப்பார். அறிமுக தொடரிலேயே அசத்தலாக விளையாடிய அக்சர் பட்டேலின் ஆட்டமும் அற்புதம்” என சொல்லியுள்ளார் அஸ்வின்

Ashwin

இந்திய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த தொடரை கைப்பற்றியது மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் இந்திய அணி எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement