ஹர்பஜன் போன்ற ஜாம்பவான் இருந்தும் இந்திய அணியில் நான் நிரந்தர இடம்பிடிக்க இதுவே காரணம் – மனம்திறந்த அஷ்வின்

- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் மிக முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இருந்து வருபவர் ரவிச்சந்திரன் அரசின் 2010ம் ஆண்டு இந்திய ஒருநாள் நிலையில் முதன்முதலாக இடம் பிடித்தார். அதற்கு அடுத்த வருடமே டெஸ்ட் அணியிலும் அறிமுகமானார். அதுமட்டுமின்றி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்று இருந்தார்.

Ashwin

- Advertisement -

இவரது காலகட்டத்தில் அணியில் மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இருந்தார். ஹர்பஜன்சிங் அப்போது மிகச் சிறந்த வீரராக வலம் வந்தார். இந்திய அணியின் சீனியர் வீரரான ஹர்பஜன் அணியில் இருந்தாலும் அவரை ஓரம்கட்டிவிட்டு தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போது தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் ஹர்பஜன்சிங் அணியில் இருக்கும் போது எப்படி இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்தார் என ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். அவர் கூறுகையில்..

Ashwin-Harbhajan

இந்திய அணிக்காக ஆடுவது என்பது மிகப்பெரிய கவுரவம். ஒரு கிரிக்கெட் வீரராக எனக்கு அது நிறைவேறிய போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆரம்பத்தில் எனது வேலையை சரியாக செய்து கொண்டேன். உள்நாட்டு போட்டிகளில் அதிகமாக ஆடியதே எனக்குப் பெரிதும் உதவியது .
பெரிதளவில் எனக்கு அழுத்தம் இல்லை.

- Advertisement -

மேலும், நான் என்றைக்குமே மற்றொரு வீரரின் இடத்தை நிரப்பி இருக்கிறேன் என்று நினைத்ததில்லை. எனக்கான இடத்தை நான் உருவாக்கிக் கொண்டேன் அவ்வளவுதான். இதற்கு ஒரு மிகப்பெரிய காரணம் தோனி தான். அவர் கேப்டனாக எனக்கு மிகப்பெரிய ஆதரவையும் நம்பிக்கையையும் அளித்துள்ளார் என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இருப்பினும் தொடர்ந்து சென்னை சி.எஸ்.கே அணிக்காக அஷ்வின், ஜடேஜா, ரெய்னா ஆகிய வீரர்களுடன் விளையாடிய தோனி அவர்களை விட்டுகொடுக்க மனமின்றி அவர்களுக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பளித்தார் என்றும் தன்னை தவிர்ப்பதற்காக அஷ்வினுக்கு வாய்ப்பளித்தார் என்றும் ஹர்பஜன் சற்று கோபமுடன் இருந்தது நாம் அறிந்ததே. ஏனெனில் அஷ்வின் எவ்வளவு தான் சிறப்பாக பந்துவீசினாலும் ஹர்பஜன் அவரை பற்றி புகழ்ந்து பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement