அடுத்து எப்போது கிரிக்கெட் துவங்கும் என்ற கேள்விக்கு அஷ்வின் அளித்த அதிர்ச்சி பதில் – விவரம் இதோ

- Advertisement -

கொரோனா வைரஸ் நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் தற்போது பலப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இரண்டு முறை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Ipl cup

- Advertisement -

இந்த ஊரடங்கு உத்திரவு மே 17ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து தங்களை பாதுகாத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த பதின்மூன்றாவது ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாக ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையும் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஆறு மாதம் எந்த வித செயல்படும் இருக்காது என்பதால் உலக கோப்பை தொடரும் நடைபெறுவது சந்தேகம் ஆகியுள்ள நிலையில் தற்போது கிரிக்இன்போ இணையதளத்திற்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Ashwin

அதில் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளின் எல்லைகளை மூடப்பட்டுள்ளன. மேலும் பல நாடுகளில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் இப்போதைக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் என்பது நடைபெற வாய்ப்பே இல்லை என்றும் அப்படி நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது என்றும் அஷ்வின் தெரிவித்துள்ளார். மேலும் நாம் இன்னும் முழுமையாக விலகவில்லை அதற்காக இன்னும் நாம் போராட வேண்டியிருக்கிறது.

Ashwin 1

கிரிக்கெட்டின் நலன் கருதினால் இப்போதைக்கு உடனடியாக நடக்க வாய்ப்பில்லை என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் நாட்கள் குறைப்பு பற்றிய ஐசிசியின் இந்த திட்டம் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. நான் ஒரு சுழற்பந்து வீச்சாளர். ஏற்கனவே இருக்கும் நாட்களில் இருந்து ஒரு நாளை தூக்கி விட்டால் இந்த போட்டியை எப்படி ஆரோக்கியமானதாக இருக்கும் என்று எனக்கு புரியவில்லை. இது டெஸ்ட் போட்டியின் சுவாரசியத்தை கெடுத்துவிடும் என்று தான் நினைப்பதாக அஸ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement