நான் 400 ஆவது விக்கெட்டை வீழ்த்தியபோது ரசிகர்கள் செய்த இந்த செயல் என்னை நெகிழவைத்தது – அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்தார். 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் வேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

Ashwin

- Advertisement -

மேலும் சர்வதேச அளவில் 16 ஆவது வீரராக இந்த சாதனையை செய்யும் அவர் இந்தியா தரப்பில் 4-வது வீரராக இணைந்தார். 400 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்த அவர் இன்னும் அனில் கும்ப்ளேவின் 619 விக்கெட்டுகள் என்ற அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையை முறியடிப்பார் என்று பலரும் தங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தனது 400வது டெஸ்ட் விக்கெட் குறித்து தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டி முடிந்து பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியின் மூன்றாவது இன்னிங்சில் அக்சர் படேல் மிக அழகாக பந்துவீசினார். நான் லாக்டவுன் காலத்தில் கடுமையாக உழைத்தேன். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது எனது பேட்டிங் பற்றி விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் என்னிடம் உரையாடினார்கள்.

Ashwin

ஆனால் எனது பந்துவீச்சில் ஏதோ ஒரு சிறப்பு இருப்பதை அவர்கள் கண்டனர். ஐபிஎல் போட்டிகளும் நான் சிறப்பாக பந்துவீசி இருந்தேன். லாக்டவுன் காலத்தில் சுமார் 7 முதல் 8 கிலோ வரை எடையைக் குறைத்து என்னுடைய பந்துவீச்சில் நுணுக்கங்களை சேர்த்தேன். எனக்கு வயதாகி விட்டதாக தோன்றவில்லை. நான் எப்பொழுதும் என்னை மேம்படுத்திக் கொள்ள வே விரும்புகிறேன். அதன்படி ஆஸ்திரேலிய தொடரிலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் சிறப்பாகப் பந்துவீசி வருகிறேன்.

ashwin 1

இந்த போட்டியில் 400 ஆவது விக்கெட்டை வீழ்த்தியதும் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று எனக்காக கைதட்டியது என்னை நெகிழ வைத்தது. மேலும் அவர்களின் இந்த செயல் எனக்கு மகிழ்ச்சி அளித்தது என்று ரசிகர்களின் ஆரவாரத்தை பாராட்டி அஸ்வின் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement