தோனியின் கேப்டன்சி பத்தி மட்டும் தான் பேசுறாங்க. ஆனா இதை யாரும் பேசறது இல்ல – மனம்திறந்த அஷ்வின்

Ashwin
Advertisement

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 15 வது சீசன் மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான மெகா ஏலம் வருகின்ற பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடக்க உள்ள வேளையில் அனைத்து அணிகளும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை வாங்க தயாராக உள்ளன.

ipl

அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்களது அணியில் நான்கு வீரர்களை தக்க வைத்துள்ள நிலையில் மீதமுள்ள வீரர்களை ஏலத்தில் எடுக்க தங்களது கவனத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு வீரரும் சிஎஸ்கே அணி குறித்து தற்போது பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் சென்னை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய இந்திய வீரருமான அஸ்வின் தோனி குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரில் எப்போதுமே மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் கேப்டன்களில் தோனியும் ஒருவர். இதுவரை அவர் சிஎஸ்கே அணியை சிறப்பாக வழிநடத்தி நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.

ashwin 2

பல நேரத்தில் அணி சிக்கலில் இருக்கும் போது தோனி தனது சிறப்பான கேப்டன்சி மூலம் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்து கொடுத்து கொடுத்துள்ளார். அதைப் பற்றி மட்டுமே பலரும் பேசுகின்றனர். ஆனால் ஆட்டம் இக்கட்டான வேளையில் அணி இருக்கும்போது தோனி மன உறுதியுடன் விளையாடி பலமுறை பினிஷிங் ஷாட் அடித்து வெற்றியை உறுதி செய்துள்ளார். ஆனால் அவரது இந்த பினிஷிங் ஷாட் குறித்து பலரும் பேசுவது கிடையாது.

- Advertisement -

என்னை பொறுத்தவரையில் எந்த அளவிற்கு தோனி கேப்டன்சியில் சிறந்து விளங்கினாரோ அந்த அளவிற்கு போட்டியை சிறப்பாக முடித்து கொடுப்பதிலும், பினிஷிங் ஷாட்டுகளை விளையாடுவதிலும் அவர் கை தேர்ந்தவர். அந்த விடயம் பற்றி யாரும் பேசாதது சற்று வருத்தம்தான். அந்த வகையில் மிகச் சிறந்த பினிஷர் என்று தான் தோனியை கூறுவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியை ஒரு அசைக்க முடியாத அணியாக மாற்றியவர் தோனி. அவரது அணுகுமுறை மற்றும் அமைதியான குணம் ஆகியவை சென்னை அணிக்கு பல அதிசயங்களை நிகழ்த்தி இருக்கிறது என்று ரவிசந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக பயிற்சியாளர் பதவியில் திடீரென விலகிய இந்திய ஜாம்பவான் – அடப்பாவமே

ஏற்கனவே சிஎஸ்கே அணியின் ஆரம்ப காலகட்டத்தில் பல போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ள அஷ்வின் பின்னர் அடுத்த பல சீசன்களாக சில அணிகளுக்கு தலைமை தாங்கியும், சில அணிகளில் ஒரு பவுலராகவும் விளையாடி வந்தார். கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய அஷ்வின் இம்முறை மெகா ஏலத்திற்கு விடப்பட்டுள்ளதால் மீண்டும் அவர் சிஎஸ்கே அணிக்கு தேர்வாக வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement