- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்காதீங்க. நாஸ்தி ஆய்டுவீங்க – மக்களுக்கு கருத்து கூறிய அஷ்வின்

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். கரோனா வைரஸ் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது. தற்போது வரை சுமாராக 3 லட்சம் பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தும் போயுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 170க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தினம்தினம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வரும் இந்தியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதற்காக இந்திய அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனை தாண்டி பொதுமக்கள் ஒன்றாக கூட வேண்டாம் எனவும், விளையாட்டுப்போட்டிகள் என பலவற்றையும் ரத்து செய்துள்ளது இந்திய அரசு. மேலும் பொது போக்குவரத்து பெரும்பாலும் முடக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால் இந்திய சமூகத்தில் சுய ஒழுக்கம் இல்லாத காரணத்தால் தொற்று நோயான இது அதிகமாக பாதிக்க கூடும் என்று தெரிகிறது. இது குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியதாவது : இந்தியா போன்ற ஒரு பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் வியாதியின் தாக்கம் மிக மோசமாக இருக்கும். ஏனெனில் இங்கு உள்ள சமுதாய மக்களுக்கு சுய ஒழுக்கம் சற்று குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும், இங்கே பெரிய பீதி இருக்கும் நேரத்தில் சமூக அலட்சியமும் உள்ளது. மகாராஷ்டிராவில் நோயாவனர் ஒருவரை அருகில் இருந்தவர்கள் அவமானப்படுத்தியதை நான் பார்த்தேன். இது சற்று மோசமாக உள்ளது நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் இந்தியா போன்ற ஒரு நாட்டில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் அஸ்வின்.

ஏற்கனவே தமிழக மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சில தினங்களுக்கு முன்னர் அஷ்வின் தனது வேண்டுகோளினை இணையத்தின் மூலம் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by