மும்பை ஏர்போர்ட்ல ஒன்றரை மணிநேரம் பிளைட் உள்ளேயே இருந்தோம் – பயோ பபுளில் இணைந்தது பற்றி பேசிய அஷ்வின்

Ashwin

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என 6 டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து செல்ல தயாராகி வருகிறது. ஜூன் இரண்டாம் தேதி இங்கிலாந்து செல்லும் இந்திய அணி அதற்கு முன்னதாக இந்தியாவில் 14 நாட்கள் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே தங்களது பயணத்தை துவங்கும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து இருந்தது.

IND

அதன்படி இந்த டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் கடந்த மே 19ஆம் தேதி முதல் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்த வீரர்கள் அனைவரும் 3 இடங்களில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர். சென்னை ஹைதராபாத் கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களில் இருந்து தனி விமானம் மும்பைக்கு புறப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த மும்பை பயணம் குறித்து பேசியுள்ள தமிழக வீரரான அஸ்வின் கூறுகையில் : இந்திய வீரர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் தற்போது மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோம். இதற்கு முன்னதாக நாங்கள் பயணித்த விதம் மிகவும் வித்தியாசமாக இருந்தது தென்னிந்தியாவை சேர்ந்த வீரர்கள் அனைவரும் சென்னையிலிருந்து புறப்பட்டோம். சென்னையிலிருந்து விமானம் புறப்படும் முன் மற்ற மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் காரில் நீண்ட தூரம் பயணித்து வந்தனர். அவர்களுக்கு அதுவே பயோ பபுள் போன்ற ஒன்றுதான்.

ashwin 1

பின்னர் சென்னையிலிருந்து விமானம் புறப்படும் போது நான் மயங்க் அகர்வால், வாஷிங்டன் சுந்தர், பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் என ஒரு சிலருடன் கிளம்பினோம். பின்னர் ஹைதராபாத்தில் மிதாலி ராஜ் மற்றும் கேஎஸ் பரத் ஆகியோர் உடன் மீண்டும் ஹைதராபாத்திலிருந்து பயணம் புறப்பட்டது. இரண்டு மணிக்கு கிளம்பிய இந்த விமான பயணம் ஆனது 6 மணிக்கு மும்பையில் முடிவடைந்தது. அதன்பிறகு அங்கு நாங்கள் நீண்ட நேரம் காத்திருப்போம் என்று நினைக்கவில்லை ஏனெனில் ஏர்போர்ட்டில் ஏற்பட்ட கடுமையான மழை பொழிவு காரணமாக எங்களை அழைத்துச் செல்ல வந்த பேருந்து ஓட்டுனர் ஓடுதளத்தின் பாதையில் மழையின் காரணமாக சிக்கிக்கொண்டார்.

- Advertisement -

Ashwin

அவர் பயோ பபுளில் இருந்த ஓட்டுநர் என்பதால் நாங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக நாங்கள் விமானத்துக்கு உள்ளேயே இருந்தோம். அதன்பின்னரே வேறு பேருந்து வந்து எங்களை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது என அஸ்வின் கூறியுள்ளார். இந்திய வீரர்கள் அனைவரும் 19 ஆம் தேதி பயோ பபுளில் இணைய 6 நாட்கள் சிறப்பு சலுகை பெற்று வந்த ரோஹித், கோலி, ரவி சாஸ்திரி ஆகியோர் 25ஆம் தேதி பயோ பபுளில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement