இதுக்கு கூடவா கட்டுப்பாடு போடுவீங்க. ஆஸி நிர்வாகத்தின் ரூல்ஸை விமர்சித்த அஷ்வின் – விவரம் இதோ

Prithi-Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது. இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை விமர்சனம் செய்தனர்.

pant-1

- Advertisement -

ஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. ரஹானே இந்த ஆஸ்திரேலிய தொடரில் இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார். இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் மற்றும் இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஶ்ரீதர் ஆஸ்திரேலியே சுற்றுப்பயணம் குறித்து பேசியிருக்கின்றனர். இந்த வீடியோவை அஸ்வின் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார். இதில் பேசிய அஸ்வின் “அடிலெய்ட் மைதானத்தில் அடைந்தால் தோல்வியால் நாங்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு மெல்போர்ன் மைதானத்தில் வெற்றியை கண்டோம்.

ashwin 1

ஆனால் இந்த வெற்றிக்கு பின் ஆஸ்திரேலிய நிறுவாகம் எங்களுக்கு பல்வேறு விதிகளை விதித்தனர். நாங்கள் சிட்னி சென்றபோது அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்று கூறினார்கள். ஆஸ்திரேலிய வீரர்களுடன் ஒரே லிப்டில் செல்ல அனுமைதி இல்லை என்றும் கூறினார்கள். நாங்களும் ஆஸ்திரேலிய வீரர்களும் ஒரே மாதிரியான பயோ பபுளில் தான் இருந்தோம். ஆனால் எங்களுக்கு அவர்களுடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது வருத்தமாக இருந்தது.

INDvsAUS

மேலும் மெல்போர்ன் வெற்றிக்கு பின் அவர்களது நடவடிக்கை முற்றிலும் மாற்றம் அடைந்தது வருத்தமாக இருந்தது” என்று அஸ்வின் பீல்டிங் பயிற்சியாளர் ஶ்ரீதரிடம் கூறியுள்ளார். ஏற்கனவே இந்த ஆஸ்திரேலிய தொடரில் ரசிகர்களின் இனவெறி சீண்டல் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களின் வார்த்தை வசைபாடல்கள் என பரபரப்பாக சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement