அபாரமான ஆஃப் பிரேக் மூலம் தெ.ஆ வீரரை போல்ட் ஆக்கிய அஷ்வின் – வைரல் வீடியோ

Ashwin-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தற்போதுவரை சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் விக்கெட்டை தனது அபாரமான ஸ்பின் மூலம் அவர் இந்த போட்டியில் அஸ்வின் வீழ்த்தினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து டெஸ்ட் அணியில் உட்கார வைக்கப்பட்டுள்ள அஸ்வினுக்கு தற்போது இந்திய மண்ணில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவரை உட்கார வைத்தது தவறு என்று கவாஸ்கர் அஸ்வினுக்கு ஆதரவாக நேற்று வர்ணனை செய்து இருந்தார். மேலும் இந்திய ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அஸ்வின் போன்ற சிறப்பான ஒரு வீரரை இவ்வளவு நாட்கள் காத்திருக்க வைப்பது மிகவும் தவறான விடையம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவரால் எங்கு சென்றாலும் சிறப்பாக பந்து வீச முடியும் என்று அஸ்வினுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டியிலும் அஸ்வின் தகுதியானவர் தான் அவரை ஏன் ஒதுக்குகிறார்கள் என்ற கேள்வியும் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement