இந்தியாகுக்கு நெருக்கடி.! அஷ்வினுக்கு வந்த சோதனை.! கலக்கத்தில் இந்திய ரசிகர்கள்.!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் நீண்ட போட்டிகளுக்கு பிறகு அனுபவமிக்க சுழல் பந்து வீச்சாளர்களான அஸ்வின் ,ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க அஸ்வினிற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

ASHWIN

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி துவங்க உள்ள டெஸ்ட் தொடருக்கு முன்னதாக எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடனான பயிற்சிப் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஆனால், இந்த போட்டியில் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள அஸ்வின் பங்குபெறவில்லை.

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக தீவிர வலை பயிற்சயில் ஈடுபட்டு வந்தது. இந்த பயிற்ச்சியின் போது அஸ்வினுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது காயம் பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக பயிற்சி ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. ஆனால் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் அவர் நலமாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ashwin india

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அஸ்வின் தற்போது காயமடைந்துள்ளது இந்திய அணிக்கு கொஞ்சம் பின்னடைவாக கருதப்படுகிறது. டெஸ்ட் போட்டிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அவரது காயம் குணமடையவில்லை என்றால் அது இந்திய அணிக்கு ஒரு பலவீனமாக மாறிவிடும். ஏற்கனவே காயம் காரணமாக புவனேஷ்வர்குமார்,பும்ரா ஆகியோர் அணியில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.