சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு பின்னர் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க இருப்பதற்கு முன்னதாக புதிய ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடம் :
அந்த வகையில் ஐசிசி வெளியிட்டுள்ள பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 870 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் என்று அறிவித்துள்ளது.
அதேபோன்று இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் 847 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் 847 புள்ளிகளுடன் பும்ராவும் நான்காவது இடத்தில் இடம்பிடித்திருக்கிறார்.
மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 788 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளனர். ரவிச்சந்திரன் அஷ்வின் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வேளையில் முதல் 10 இடங்களுக்குள் மேலும் இரண்டு இந்திய வீரர்களாக பும்ரா மற்றும் ஜரேஜா ஆகியோர் என மற்றும் மூன்று வீரர்கள் முதல் பத்து வரிசைக்குள் இடம் பெற்றுள்ளனர்.
அதே போன்று டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா 444 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அஸ்வின் 332 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். அவர்களை தவிர்த்து அக்சர் பட்டேலும் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : அலைஸ்டர் குக்கின் சாதனையை சமன் செய்த் ஜோ ரூட்.. சச்சினையும் தாண்டி அசத்தப்போறது கன்பார்ம்
ஏற்கனவே வெளியான டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, ஜெயிஸ்வால், விராட் கோலி ஆகியோர் முறையே 6,7,8 ஆகிய இடங்களை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



