எனக்கு முன்னாடி இந்தியன் டீமுக்கு இவர் தான் செலக்ட் ஆகி இருப்பாரு. ஆனா ஹீரோ ஆயிட்டாரு – அஷ்வின் பகிர்ந்த தகவல்

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருந்துவந்தது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐ.பி.எல், உள்ளூர் கிரிக்கெட் தொடர் மட்டுமின்றி எந்த ஒரு கிரிக்கெட் வரும் நடைபெறாததால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

Ashwin

இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி வரும் வீரர்கள் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களுடன் அவர்களது கேள்விக்கு பதில் அளிப்பது மட்டுமின்றி சக வீரர்கள், பிரபலங்கள் என அனைவருடனும் வீடியோ கால் மூலமாக உரையாடியும் வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகனான விஷ்ணு விஷாலை பேட்டி கண்டார்.

மேலும் அந்தப் பேட்டியில் பல சுவாரசிய விடயங்களை அஷ்வின் பகிர்ந்துகொண்டார். அதாவது அஸ்வின் இந்திய அணிக்கு தேர்வாவதற்கு முன்னால் விஷ்ணு விஷாலும் தீவிர கிரிக்கெட்டராக செயல்பட்டு கொண்டிருந்ததாகவும் அவரின் தலைமையில் அஸ்வின் விளையாடி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

vishnu

மேலும் ஒரே கிளப் அணிக்காக விளையாடிய இருவரும் இந்திய அணியில் தேர்வு ஆவார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆம் ஆனால் ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷால் கிரிக்கெட்டில் இருந்து விலகி செல்ல அஸ்வினோ தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டு இந்திய அணிக்கு தேர்வானாராம். பிறகு நாட்கள் கடந்து திரும்பிப் பார்க்கையில் விஷ்ணு விஷால் டிராக் மாறி தமிழ் படங்களில் ஹீரோவாக மாறி விட்டார்.

- Advertisement -

Vishnu

நான் இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன் என்று அஷ்வின் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே விஷ்ணு விஷால் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது நாம் அறிந்ததே மேலும் ரஞ்சி போட்டிகளில் விளையாடியுள்ள விஷ்ணு விஷால் தனது சொந்த விடயம் காரணமாக கிரிக்கெட்டை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.