தன்னுடைய திறமையை சரியாக அதிகரித்து வருகிறார். அவர் செம டேலன்ட் – இளம்வீரரை புகழ்ந்த அஷ்வின்

விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் சிறப்பான திறமையை கொண்டுள்ளதாக ரவிசந்திரன் அஸ்வின் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து தன்னை வலிமையாக்கி கொள்வார் என்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டால் மட்டுமே போதுமானது என்றும் அவர் கூறியுள்ளார். பந்த்தின் கீப்பிங்கை முதலில் முன்னாள் கேப்டன் தோனியுடனும் தற்போது விரித்திமான் சாஹாவுடனும் அனைவரும் ஒப்பிடுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Ashwin

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் இடது கை பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் சமீப காலங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிரடி ரன்களை குவித்து வருவதுடன் அவரது கீப்பிங்கிலும் அதிக அளவில் முன்னேற்றம் காணப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் சிறப்பான கீப்பிங்கை மேற்கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.கடந்த காலங்களில் அவரை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடனும் தற்போது விரித்திமான் சாஹாவுடனும் விக்கெட் கீப்பிங்கில் அனைவரும் ஒப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் தன்னுடைய பெயரை நிலைநாட்ட விரும்புவதாகவும் தோனி போன்ற ஜாம்பவான்களுடன் தன்னை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்றும் முன்னதாக ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரவிசந்திர அஸ்வின் :

pant

ரிஷப் பந்த் சிறப்பான திறமையை கொண்டுள்ளதாகவும் அவர் தன்னை தொடர்ந்து வலிமையாக்கிக் கொள்வார் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.மேலும் அவருக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே அவர் சிறப்பாக முன்னேறுவார் என்றும் கூறியுள்ளார். முன்னதாக கீப்பிங்கில் தோனி மற்றும் தற்போது சாஹாவுடன் அவரை ஒப்பிடுவதை சுட்டிக் காட்டிய ரவி அஸ்வின், ரிஷப் சிறப்பான திறமையை கொண்டுள்ளதை அவர் குறைந்த ஓவர்கள் போட்டிகளில் விளையாடும்போது தான் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

pant 1

மேலும் சமீபகாலமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் வேட்டை நடத்திவரும் பண்ட் இந்த இங்கிலாந்து தொடரிலும் பேட்டிங் மற்றும் கீப்பிங் என அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் தான் இழந்த இடத்தை பிடிக்க அவர் தீவிரம் காண்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.