இந்திய டெஸ்ட் அணிக்கு யார் சிறந்த கேப்டன் ? ரஹானேவா ? கோலியா ? – அஷ்வின் பதில் இதுதான்

Ashwin-3

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இடம் பெற்று இருந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அபாரமான சுழற்பந்து வீச்சின் மூலம் ஆஸ்திரேலிய வீரர்களை அலறவிட்டார். மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் பேட்டிங்கில் நீண்ட நேரம் களத்திலிருந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த அந்த ஆஸ்திரேலியா தொடர் குறித்து சில விடயங்களை அஸ்வின் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது :

ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களை நிச்சயம் குறைத்து மதிப்பிட்டு இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு எங்களது பலம் தெரியும். நாங்கள் 36 ரன்களுக்குள் சுருண்டு ஆட்டமிழந்து தோற்ற பிறகு அதிலிருந்து குறுகிய காலத்தில் மீண்டது சிறப்பான விடயம். மேலும் 2016ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இருந்தே எனது பேட்டிங் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

நான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடி வருகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் குவிப்பது எளிது அல்ல, இதனை சிலர் புரிந்து கொள்ள வேண்டும். பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டியது தான் என்னுடைய குறிக்கோள். சில இன்னிங்ஸ்களில் பேட்டிங் சரியாக செய்யவில்லை என கூறி அணியில் இருந்து நீக்குவது சரியாக சரியானது அல்ல. பந்துவீச்சில் நான் எவ்வாறு செயல்படுகிறேன் என்பதை பாருங்கள்.

ashwin 1

வெளிநாட்டு மைதானங்களிலும் நான் சிறப்பாக செயல்பட்டு உள்ளேன். சிறந்த ஸ்பின்னர் என சொல்லும் அளவிற்கு பல சாதனைகளைப் படைத்துள்ளேன் என்று கூறினார். மேலும் இந்திய அணியில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த அஷ்வின் : யாரையும் யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை.

- Advertisement -

Rahane

இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் திறமையான வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இருக்கின்றனர் அதனால்தான் இந்திய அணிக்கு வெற்றிகள் கிடைத்து கொண்டு இருக்கிறது மேலும் கேப்டனாக சிறந்தவர் ரகானேவா ? கோலியா ? என்று நீங்கள் கேட்டால் இவர்கள் இருவரையும் மாற்றங்கள் எதுவுமில்லை இருவருமே சிறந்த கேப்டன் தான் என்று அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.