- Advertisement -
ஆசிய கோப்பை

சுப்மன் கில்லின் வருகையால் சஞ்சு சாம்சனின் இடத்திற்கு தான் ஆபத்து.. காரணத்தை கூறிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிரவரும் 2026 டி20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இம்முறை ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடத்தப்பட இருக்கிறது. அதற்கான அட்டவணைகளும் ஏற்கனவே வெளியாகிவிட்டன.

சுப்மன் கில்லின் வருகையால் சஞ்சு சாம்சனின் இடத்திற்கு ஆபத்து :

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு வெளியானதிலிருந்து பல்வேறு விவாதங்கள் அணித்தேர்வின் மீது நடைபெற்று வருகின்றன. மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் இந்த அணித்தேர்வு குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த தொடரில் சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளதால் சஞ்சு சாம்சன் தனது துவக்க வீரருக்கான இடத்தை இழப்பார் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : தேர்வுக்குழுவினரின் வேலை என்பது மிக முக்கியமான ஒன்று. சில வீரர்களை நீக்குவதும், சில வீரர்களை வெளியேற்றுவதும் சாதாரண விடயம் கிடையாது.

அதற்கான உரிய விளக்கங்களை அவர்கள் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றனர். ஷ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்த தொடரில் இடம் பெறாதது உண்மையில் எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது. அதேவேளையில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

எனவே அவர் அந்த இடத்திற்கு தகுதியானவர் தான். ஆனால் சுப்மன் கில் இப்படி அணிக்குள் வந்ததால் சஞ்சு சாம்சன் தான் தனது இடத்தை இழப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அபிஷேக் ஷர்மா டி20 போட்டிகளில் முதன்மை துவக்க வீரராக இருக்கிறார். தற்போது சுப்மன் கில் அணிக்குள் வந்துள்ளதால் அவரை வேறு எங்கும் விளையாட வைக்க முடியாது.

இதையும் படிங்க : கே.எல் ராகுலை கடந்து சாதனை நிகழ்த்தப்போகும் ஹார்டிக் பாண்டியா.. இன்னும் 5 சிக்ஸ் போதும் – விவரம் இதோ

துவக்க வீரராக மட்டுமே அவர் இடம் பெறுவார். அதோடு துணை கேப்டனாக இருப்பதால் அவர் அணியில் இடம்பெற வேண்டியது அவசியம். அந்த வகையில் பார்க்கையில் சஞ்சு சாம்சன் தான் பென்ச் செய்யப்படுவார் என்று தெரிவதாக அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -