கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் ஆகியோரது சாதனையை ஓரங்கட்டவுள்ள அஷ்வின் – விவரம் இதோ

Ashwin

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று அஹமதாபாத்தில் புதிதாய் புதிப்பிக்கப்பட்டுள்ள “மோதிரா” ஸ்டேடியத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்துடன் தோல்வி அடைந்து பின்னர் இரண்டாவது டெஸ்டை இந்தியா அபாராமாக வென்ற பின்னர் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.
இந்நிலையில் நாளை தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு மாபெரும் ரெக்கார்டை படைக்க இந்திய வீரருக்கு பெரிய வாய்ப்பு உள்ளது.

Ashwin 3

அது வேறு யாரும் அல்ல நம் தமிழக வீரர் ரவிசந்திரன் அஷ்வினே ஆவார். அஷ்வின் இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் மொத்தமாக 394 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பவுலிங் சராசரி 25.20 ஆகும். அவரது கேரியரில் சிறந்த பந்துவீச்சு எது என்றால் அது நியூசிலாந்துக்கு எதிரான ஒரு இன்னிங்சில் 59 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியதே ஆகும். மேலும் அவர் 29 முறை 5 விக்கெட் ஹாலும் , 7 முறை 10 விக்கெட் ஹாலும் எடுத்துள்ளார்.

அஷ்வினுக்கு 400 விக்கெட்டுகளை எட்ட இன்னும் ஆறு விக்கெட்டுகளே தேவை. அதை இந்த மூன்றாவது டெஸ்டிலேயே அவர் சுலபமாக எட்டி விடுவார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். அப்படி அவர் எடுத்துவிட்டால் மிகக் குறைந்த இன்னிங்ஸில் அதி வேகமாக 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையை தட்டிச் செல்லுவார்.

Ashwin

இதற்கு முன் 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையே கும்ப்ளே ( 85 டெஸ்ட் ), ஹர்பஜன்சிங் ( 96 டெஸ்ட் ) , கபில்தேவ் ( 111 டெஸ்ட் ) ஆவார்கள். அஷ்வின் இந்த போட்டியிலேயே 400 விக்கெட்டுகள் கைப்பற்றினால் வெறும் 77 டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற புதிய ரெக்கார்ட் படைப்பார்.

- Advertisement -

Ashwin

இந்நிலையில் அஷ்வினது 400 விக்கெட்டை கொண்டாட அனைத்து இந்திய ரசிகர்களும் மிக ஆவலுடன் காத்துகொண்டுள்ளனர்.