Ashwin : தந்திரவேலையை மீண்டும் காண்பித்த அஸ்வின். தப்பித்த வார்னர், பலியாகிய நபி

நேற்று மொஹாலி மைதானத்தில் முதலில் டாஸ் வென்று அஸ்வின் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பந்துவீசியது. இந்த போட்டியில் அஸ்வினை முக்கியமாக வைத்து பல சுவாரசியமான நிகழ்வுகள்

raviashwin
- Advertisement -

நேற்று மொஹாலி மைதானத்தில் முதலில் டாஸ் வென்று அஸ்வின் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பந்துவீசியது. இந்த போட்டியில் அஸ்வினை முக்கியமாக வைத்து பல சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறின. அதில் முக்கியமான ஒன்று அஸ்வின் பந்துவீசியபோது வார்னர் அஸ்வினை கண்டு பயந்தது.

Warner

- Advertisement -

அஸ்வின் தனது முதல் ஓவரை வீச சற்று மெதுவாக ஓடிவந்தார். அப்போது வார்னர் கிரிஸ் அருகில் நின்று அஸ்வின் பந்துவீசுகிறாரா ? என்று பார்த்துவிட்டு ஓடத்தயாராகிறார். ஏனெனில், பட்லரை மான்கட் முறையில் அவுட் ஆக்கியது போல் நம்மையும் அவுட் செய்து விடுவாரோ என்று எண்ணி சில நொடிகள் கிரிஸ் அருகில் நின்றே பின்பே ரன் ஓடினார். இதனால் அஸ்வினின் தந்திரசெயலில் இருந்து வார்னர் தப்பினார்.

ஆனால் , அஸ்வினின் அபார பீல்டிங் மூலம் நபி ஏமாற்றத்தோடு ரன்அவுட் ஆனார். 14 ஆவது ஓவரை அஸ்வின் வீச அந்த பந்தை வார்னர் வேகமாக அடிக்க அதனை அஸ்வின் ஒருகையால் தடுத்தார். இதை பார்க்காத நபி சில அடிகள் ஓடினார். உடனே பிடித்த பந்தை தனது இடது கையால் ஸ்டம்பில் அடித்து நபியை ரன் அவுட் செய்தார் அஸ்வின். இதனால் மிகுந்த ஏமாற்றத்தோடு சோகமாக பெவிலியன் திரும்பினார் நபி.

Nabi

முன்பெல்லாம் அஸ்வின் பந்துவீசுவதில் மட்டுமே ரசிகர்கள் கவனித்து வந்தனர். ஆனால், இந்த வருடம் அஸ்வின் செய்யும் விடயங்கள் சர்ச்சை ஆகும் வரை ரசிகர்கள் அதனை கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஐ.பி.எல் தொடரின் 22 ஆவது போட்டி மொஹாலி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

- Advertisement -

Bhuvi

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை அடித்தது இதனால் பஞ்சாப் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

rahul

சன் அணி சார்பில் துவக்க வீரரான டேவிட் வார்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 70 ரன்களை அடித்தார். இதில் 6 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். இறுதிக்கட்டத்தில் ஹூடா 3 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க சன் ரைசர்ஸ் ஓரளவு சுமாரான ஸ்கோரை எட்டியது.

rahul

பிறகு 151 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. பஞ்சாப் அணி சார்பாக ராகுல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 71 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். மேலும், மாயங்க் அகர்வால் 55 ரன்களை அடித்தார்.

Advertisement