ஏன் இந்த தேவையில்லாத வேலை. சர்ச்சையான அஷ்வினின் பந்துவீச்சு – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் அதற்கு அடுத்த கொல்கத்தா டெஸ்ட் போட்டிக்காக இரு அணி வீரர்களும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ashwin 1

- Advertisement -

மேலும் இதுகுறித்து பல சர்ச்சையான கருத்துக்கள் தொடர்ந்து வலம்வந்து கொண்டிருக்கின்றன. ஏனெனில் வலது கை பந்துவீச்சாளரான அவர் பல வித்தியாசமான முறைகளில் பந்துகளை வீசியிருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இம்முறை நேற்று இடதுகை மூலம் பந்துவீச்சு பயிற்சி எடுத்தார். குறிப்பாக இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயசூர்யா போன்று பந்து வீசும் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார்.

இதனை கண்ட நெட்டிசன்கள் ஏன் இவருக்கு இந்த தேவையற்ற வேலை எதற்காக இவ்வாறு பயிற்சி செய்கிறார். அவர் சாதாரணமாக பந்துவீசினாலே தொடர்ந்து விக்கெட்டுகள் விழும் என்று தங்களது கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் அவர் பொழுதுபோக்காக சிறிது நேரம் அவ்வாறு பயிற்சி செய்தது தெரியவந்துள்ளது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் பகலிரவு போட்டியாக நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement