புஜாரா இதை மட்டும் செய்ஞ்ஜா என் ஒருபக்கம் மீசையை எடுத்துட்டு கிரவுண்டுக்கு வரேன் – சவால் விட்ட அஷ்வின்

Pujara

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது. இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை விமர்சனம் செய்தனர்.

pujara 1

ஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. ரஹானே இந்த ஆஸ்திரேலிய தொடரில் இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார். இதில் இளம் வீரர்களான முகமது சிராஜ், நவ்தீப் சைனி, தங்கராசு நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டான புஜாரா சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற முக்கியமான காரணமாக இருந்தார். அது மட்டுமின்றி சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அஸ்வினுடன் இணைந்து சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்த முக்கிய காரணமாக இருந்தார்.

pujara 2

அப்போது கம்மின்ஸ் வீசிய ஓவரில் புஜாரா காயத்திற்கு உள்ளாகினார். இருந்தாலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தார் புஜாரா. இதனால் புஜாரா இந்திய அணியின் தூணாக கருதப்பட்டு வருகிறார். இந்நிலையில், அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் இந்திய பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோருடன் புஜாராவின் பேட்டிங் குறித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

pujara

அப்போது அஸ்வின் புஜாரவிற்கு ஒரு சேலஞ்ச் செய்து இருக்கிறார். “இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மொயின் அலி உள்ளிட்ட ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டு “ஓவர் தி டாப் என அடித்து ஆடினால்” என்னுடைய பாதி மீசையை எடுத்து விட்டு மைதானத்தில் விளையாடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.