பிப்ரவரி மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது பட்டியலில் பட்டியலில் இடம்பிடித்துள்ள – தமிழக வீரர்

Ashwin-1

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி மாதம்தோறும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தேர்வு செய்து ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்ற வீரர்களை அறிவித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் இளம் அதிரடி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் வென்றிருந்தார்.

pant

இந்நிலையில் தற்போது பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில் இந்த மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்பதற்கான வீரர்களின் பட்டியலை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைல் மேயர்ஸ் ஆகியோரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

அதன்படி ஆன்லைன் மூலமாக ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் கிடைக்கும் புள்ளிகள் மூலமாக வெற்றியாளர் யார் என்பதை ஐசிசி அறிவிக்கும். கடந்த மாதம் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 106 ரன்களும், பவுலிங்கில் 24 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக ஆண்டிற்கு ஒரு முறை சிறந்த வீரர்கள், சிறந்த அணி, சிறந்த கேப்டன் என்று விருதுகளை ஐசிசி அறிவித்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மாதம் தோறும் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து அவர்களை கௌரவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -