தொடர் நெருக்கடிக்கு மத்தியில் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் – ஏற்படவுள்ள மாற்றம்

indvseng
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இனி வருகின்ற போட்டியிலும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

Bumrah

- Advertisement -

இந்நிலையில் வருகின்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியில் முக்கிய மாற்றங்கள் பல செய்யப்பட உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அணியிலும் ஒரு முக்கிய மாற்றம் நிகழ உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த மாற்றம் யாதெனில் முதலிரண்டு போட்டிகளிலும் வாய்ப்பை தவறவிட்ட அஸ்வினுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.

ஏனெனில் முதலிரண்டு போட்டிகளிலும் அஷ்வின் இடம்பெறாமல் இருந்தபோதே ரசிகர்கள் மத்தியிலும் சரி, கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் சரி அவர் சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

Ashwin

அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்ற ஜடேஜா பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டால் கூட பந்துவீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் நிச்சயம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இடம் பெறுவார் என்று தோன்றுகிறது. அஸ்வின் இடம்பெறும் பட்சத்தில் அவர் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை தனது பந்துவீச்சின் மூலம் திணறடிப்பார் என்று நம்பலாம்.

Ashwin

அதேவேளையில் பேட்டிங்கில் சமீபத்தில் அவர் சென்னை டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியுள்ளதால் பேட்டிங்கிலும் ஓரளவு ரன்களை குவிக்க முடியும் என்ற காரணத்தினால் அஷ்வின் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அஷ்வின் சேர்க்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்து வருவதால் நிச்சயம் இந்த மாற்றம் குறித்து கோலி பரிசீலிப்பார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement